கோவையை தகர்க்கும் சதி: மேலும் 6 பேர் கைது
கோவை:
கோவை நகரை குண்டு வைத்துத் தகர்க்கும் திட்டத்தை மேற்கொள்வதற்காகநகருக்குள் ஊடுறுவியிருந்த மேலும் 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
கோவை அரசு பொது மருத்துவமனை, ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட 8முக்கிய இடங்களில் வெடிகுண்டுகளை வைத்துத் தகர்க்க திட்டமிட்டிருந்த கும்பலின்சதியை போலீஸார் முறியடித்தனர்.இதுதொடர்பாக 2 நாட்களுக்கு முன்பு 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.இவர்களில் ஒருவர் கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் தொடர்புடையவர்என்பது விசாரணையில் தெரிய வந்தது. இவர்களில் ஒருவர் கேரளாவைச் சேர்ந்தவர்.
இவர்களிடமிருந்து 17 கிலோ ஆர்.டி.எக்ஸ். வெடிபொருள், பைப் வெடிகுண்டுகள்,ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டர்கள், ஆயுதங்கள், கோவை நகர வரைபடம்ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இதைத் தொடர்ந்து கோவை நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. தீவிர வாகனச்சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்கள்கொடுத்த தகவலின் பேரில் நேற்று மேலும் 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.
இவர்கள் சரவணம்பட்டியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்தனர். இவர்களிடமிருந்து கிடைந்த தகவலின் பேரில் நேற்று இரவு மேலும் 4 பேரைபோலீஸார் வளைத்துப் பிடித்தனர். கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஜெலட்டின்குச்சிகள், டெட்டனேட்டர்கள், மின்சார வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும் பாஜக தலைவர்கள், இந்து அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோரது வீட்டுகவரிகள், தொலைபேசி எண்கள் ஆகியவை அடங்கிய டைரியும் சிக்கியது. இதன்மூலம் இந்து தலைவர்களை தீர்த்துக் கட்டும் நோக்குடன் இவர்கள் கோவையில்ஊடுறுவியிருந்தது தெரிய வந்தது.
அடுத்தடுத்து தீவிரவாதச் செயல்களில் ஈடுபடத் திட்டமிட்டிருந்தோர் கைதுசெய்யப்பட்டு வருவதால் கோவை நகரில் போலீஸார் அதிகபட்ச கண்காணிப்பைமேற்கொண்டுள்ளனர்.
இதற்கிடையே, போலீஸாரால் ஏற்கனவே கைது செய்யப்பட்ட அத்திக்கூர் ரஹ்மான்,மாலிக் பாஷா, ஆரூண் பாஷா, திப்பு சுல்தான் ஆகியோர் கொடுத்துள்ளவாக்குமூலத்தில், எங்களது சமூகத்திற்கு ஏதாவது பாதிப்பு என்றால் அதற்குப் பதிலடிகொடுக்க ஒரு இயக்கத்தை நாங்கள் ஆரம்பித்தோம். அதற்கு மனித நீதி பாசறை என்றுபெயர் வைத்தோம்.
அந்த இயக்கத்தின் சார்பில் கோவையில் பல இடங்களில் வெடிகுண்டுகளைவெடிக்கச் செய்து அசம்பாவிதத்தை ஏற்படுத்தி புரட்சி செய்யத் திட்டமிட்டிருந்தோம்.
எங்கு வெடிகுண்டுகளை வைக்கலாம் என்பதற்காக இடங்களைத் தேர்வு செய்ததும்,வெடிகுண்டுகளை வைப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில், அவற்றை வரைபடம்மூலம் குறித்து வைத்துக் கொண்டோம்.
கணபதி பூந்தோட்டம் பகுதியில் உள்ள வீட்டில் தங்கி வெடிகுண்டுகளைத் தயாரிக்கமுடிவு செய்தோம். 2 பைப் குண்டுகளையும், 2 நாட்டு வெடிகுண்டுகளையும் தயார்செய்து விட்டோம். கடந்த 22ம் தேதி முதல் குண்டை வைக்க முடிவு செய்திருந்தோம்.
மக்கள் அதிகம் நடமாடும் கோவை அரசு மருத்துவமனையில்தான் முதல் குண்டைவெடிக்கச் செய்ய திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதற்குள் போலீஸில் சிக்கிவிட்டோம்.
யாரையும் பழிவாங்குவதற்காக இந்தத் திட்டத்தை நாங்கள் தயாரிக்கவில்லை.கோவையில் அசம்பாவிதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதுதான் எங்களது திட்டம்.எங்களால் எதையும் செய்ய முடியும் என்பதை எடுத்துக் காட்டவே இந்தத் திட்டம்.
உயிர்ச் சேதத்தை ஏற்படுத்துவது எங்களது நோக்கமல்ல என்று அவர்கள்தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.












Click it and Unblock the Notifications