சசியிடம் நிலம் மீட்பு-நாளை சிபிஎம் பேரணி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சிறுதாவூரில் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள தலித்நிலங்களை மீட்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாளை கோட்டைநோக்கி பேரணி நடத்தப்படுகிறது.
சென்னையில் சி.பி.எம். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி செய்தியாளர்களிடம் இதுகுறித்துக்கூறுகையில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் அண்ணாஆட்சிக்காலத்தில் தலித்மக்களுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்தோழி சசிகலாவால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.இந்த நிலத்தை மீட்கக் கோரியும், நிலத்தை மீட்டு தலித்துகளிடம் வழங்கக் கோரியும்முதல்வரிடம் மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக பாதிக்கப்பட்ட தலித்துகள்மற்றும் அவர்களின் குடும்பத்தினரோடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஎம்.எல்.ஏக்கள் மாநிலச் செயலாளர் வரதராஜன் தலைமையில் நாளை காலை 11மணிக்கு கோட்டை நோக்கி ஊர்வலமாக செல்கிறோம்.
தலைமைச் செயலகத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து இக்கோரிக்கைதொடர்பாக மனு கொடுக்கவுள்ளோம் என்றார் கோவிந்தசாமி.












Click it and Unblock the Notifications