ஐநா செயலாளர்-சசி தரூருக்கு பிரகாச வாய்ப்பு
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட இந்தியாவின் சசி தரூருக்குவாய்ப்புகள் அதிகரித்துள்ளன. ஐ.நா. பாதுகாப்பு சபை உறுப்பினர்களிடையே நடந்த ரகசிய வாக்கெடுப்பில் சசிதரூருக்கு 2வது இடம் கிடைத்துள்ளது.
ஐ.நா பொதுச் செயலாளர் பதவிக்கு இந்தியாவின் சசி தரூர் உள்ளிட்ட 4 பேர் போட்டியிடுகின்றனர். மற்றவர்கள்தென் கொரிய வெளியுறவு அமைச்சர் பான் கி மூன், தாய்லாந்து துணை பிரதமர் சுரக்கிராட் சதிரதாய் மற்றும்இலங்கையைச் சேர்ந்த ஜெயந்த தனபாலா ஆவர்.
![]() |
ஆதரவு, ஆதரவு இல்லை மற்றும் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்ற 3 சாய்ஸ் கொண்ட கேள்விகேட்கப்பட்டு பாதுகாப்பு கவுன்சிலில் இடம் பெற்றுள்ள 15 நாடுகளின் உறுப்பினர்களிடமும் சீட்டுகள்தரப்பட்டன.
இதில் தென் கொரிய வேட்பாளர் பானுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன. அவருக்கு ஆதரவாக 12 ஓட்டுக்களும்,எதிராக ஒரு ஓட்டும், கருத்து தெரிவிக்க விரும்ப விரும்பவில்லை என இரு நாடுகளும் வாக்களித்தன.
தரூருக்கு 10 ஓட்டுக்கள் கிடைத்தன. அவருக்கு எதிராக 2 பேர் வாக்களித்துள்ளனர். 3 ஓட்டுக்கள் நோஒபீனியன் ஓட்டுக்கள் ஆகும்.
தாய்லாந்தின் சதிரதாய் 7 ஓட்டுக்களுடன் 3வது இடத்தையும், இலங்கையின் தனபாலா 5 ஓட்டுக்களுடன் 4வதுஇடத்தையும் பெற்றனர்.
இதன் மூலம் இந்தியாவின் சசி தரூருக்கு ஐ.நா பொதுச் செயலாளர் தேர்தலில் வெற்றி வாய்ப்புபிரகாசமாகியுள்ளது. சசி தரூரை ஆதரிப்பது குறித்து பரிசீலிப்பதாக அமெரிக்காவும், ஜெர்மனியும் ஏற்கனவேதெரிவித்துள்ளது நினைவிருக்கலாம்.
நான்கு வேட்பாளர்களும் பெற்ற ஓட்டு விவரங்களுக்கு அவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போதைய ஐ.நாபொதுச் செயலாளராக உள்ள கோபி அன்னானின் பதவிக்காலம் வருகிற டிசம்பர் 31ம் தேதியுடன்முடிவடைகிறது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் அவர் இப்பதவியில் இருந்துள்ளார்.
ஐ.நா. பொதுச் செயலாளர் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள் ஆகும். ஒருவர் அதிகபட்சம் 2 முறை இப்பதவியைவகிக்க முடியும். இம்முறை ஆசிய நாட்டைச் சேர்ந்தவர்தான் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படவேண்டும்.
இப்பதவிக்கு இந்தியா, தென்கொரியா, இலங்கை மற்றும் தாய்லாந்து நாட்டு வேட்பாளர்கள் மட்டுமேபோட்டியிடுகின்றனர்.
துருக்கியைச் சேர்ந்த கெமால் டெர்விஸ், ஜோர்டான் இளவரசர் ஜெய்த் உல் உசேன், சிங்கப்பூர் முன்னாள்பிரதமர் கோ சோக் டாங் ஆகியோரின் பெயர்களும் அடிபட்டன. ஆனால் அவர்கள் யாரும் போட்டியிடவில்லை.
10 ஆண்டுகளுக்கு முன்பு அன்னான் முதல் முறையாக இப்பதவிக்கு வந்ததற்கு அமெரிக்காவே முக்கியக்காரணம். ஆப்பிரிக்கர் ஒருவர் தலைவராக வேண்டும் என்ற நிலையில், அப்போது எகிப்து நாட்டைச் சேர்ந்தமுன்னாள் ஐ.நா. பொதுச் செயலாளர் புட்ரோஸ் காலி மீண்டும் பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிட்டார்.
ஆனால் அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி காலியை காலி செய்துவிட்டு அன்னானைதேர்வு செய்தது.
இந்த முறையும் அப்படி ஏதாவது நேரக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அமெரிக்காவின்ஆதரவைப் பெற இந்தியா தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வீட்டோ அதிகாரத்துடன் கூடிய ரஷ்யாஉள்ளிட்ட பாதுகாப்பு கவுன்சிலின் மற்ற நிரந்தர நாடுகளின் ஆதரவையும் பெற இந்தியா முனைப்பாக உள்ளது.
தற்போதைய வாக்கெடுப்பில் 2 ஓட்டுக்கள் மட்டுமே பின்தங்கிய நிலையில் தரூர் உள்ளார்.
இந்த வாக்கெடுப்பு குறித்து தரூர் கருத்து தெரிவிக்கையில், தென் கொரியாவின் பான் மீது தனிப்பட்ட முறையில்நான் மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன். இருப்பினும் ஐ.நா சபையை 21வது நூற்றாண்டில் மேலும் வலுப்படுத்திக்காட்ட என்னால் முடியும் என்பதையும் தெரிவிக்க ஆசைப்படுகிறேன். எனது போட்டியின் சிறப்பான ஆரம்பத்தைஇந்த வாக்கெடுப்பு வெளிப்படுத்தியுள்ளது.
எனக்கு மேலும் ஆதரவைத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார் தரூர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக













Click it and Unblock the Notifications