மலேசியாவில் இந்துக் கோவில் இடிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

மலேசியாவில் 60 ஆண்டு பழமையான இந்துக் கோவில் இடிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூரில் உள்ள இந்தக் கோவிலை அந்த நகர மாநகராட்சி இடித்துத் தள்ளிவிட்டதாக நாடாளுமன்றத்தில்மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் அகமத் தெரிவித்தார்.

அந்தக் கோவில் அரசு நிலத்தில் இருந்தது. அப் பகுதியின் வளர்ச்சிப் பணிகளுக்கு நிலம் தேவைப்படுவதாகக்கூறி கோவிலை வேறு இடத்துக்கு மாற்றுமாறு மாநகராட்சியினர் கோரினர். வேறு இடத்தையும் ஒதுக்கித் தந்தனர்ஆனால், அதை ஏற்க கோவில் நிர்வாகிகள் மறுத்ததால் கோவில் இடிக்கப்பட்டதாக மலேசிய அதிகாரிகள்தெரிவித்ததாக அகமத் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக அந் நாட்டு அரசுடன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் பேசி வருகின்றனர்என்றார்.

மலேசிய இளவரசியைக் குத்திக் கொன்ற மகன்:

இதற்கிடையே மலேசிய நாட்டு இளவரசியை அவரது மகனே குத்திக் கொலை செய்தார். பின்னர் அதிக போதைமருந்த உட்கொண்டதால் அவரும் இறந்தார்.

மலேசியாவின் கிழக்குப் பகுதியான பஹாங் மாகாணத்தின் ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர் இளவரசர் சுல்தான்அமகது ஷா. இவரது சகோதரி இளவரசி டெங்கு புதேரி கமரியா. இவரது வீடு பேகான் டவுன் என்ற ஊரில்உள்ளது.

இளவரசி கமரியாவின் கணவர் டுங்கு இஸ்மாயில் டுங்கு சுலைமான். இவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வீல்சேரில் இருப்பவர். இவர்களது மகன் டுங்கு ரிஸால் ஷாஜான் (வயது21) நேற்று திடீரென தனது தந்தையைத் தாக்க முயன்றுள்ளார். இதைப் பார்த்துஅதிர்ச்சி அடைந்த கமரியா, மகனைத் தடுக்க முயன்றுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த ரிஸால், தன் கையில் வைத்திருந்த கத்தியால் தனது தாயாரை சரமாரியாகக் குத்தினார்.இதில் இளவரசி கமரியா சம்பவ இடத்திலேயே இறந்தார். பின்னர் தனது தந்தையையும் கத்தியால் குத்தமுயன்றார். ஆனால் அதற்குள் விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் ரிஸாலை தடுத்தனர். அதன் பின்னர்அங்கிருந்து தப்பினார் ரிஸால்.

அவர் அதிக அளவில் போதை மருந்து உட்கொண்டிருந்ததாகவும், இதன் காரணமாகவே தாய், தந்தையை குத்தமுயற்சித்தார் என்றும் கூறப்படுகிறது. போதை அதிகமானதால் மயக்கமடைந்த அவர் பின்னர் மருத்துவமனைஒன்றில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்து விட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+