தலித் நிலத்தில் சிறுதாவூர் பங்களா இல்லை-திருமா
திருப்போரூர்:
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அவ்வப்போதுதங்கும் சிறுதாவூர் பங்களா, தலித் மக்களின் நிலத்தைஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை. அந்த நிலத்திற்கும்,ஜெயலலிதாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றுவிடுதலைச் சிறுத்தைகள் கட்சி பொதுச் செயலாளர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
இந்தப் பிரச்சனையை வைத்து ஜெயலலிதாவை பழி வாங்க திமுக அரசு முயல்வதாககுற்றம் சாட்டினார்.சிறுதாவூரில் சசிகலாவால் ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் தலித்களின் நிலத்தைதனது கட்சியின் 2 எம்எல்ஏக்களுடன் சென்று பார்வையிட்டார் திருமாவளவன்.பின்னர் சிறுதாவூர் கிராம பாலாட்டம்மன் கோவில் அருகே கூடியிருந்த மக்களிடம்அவர் பேசுகையில்,
ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் 53 ஏக்கர் நிலத்தை உடனடியாக மீட்டு கொடுக்கமாட்டார்கள். உங்களுக்குள் சண்டை சச்சரவு வேண்டாம். தலித் மக்கள் அனைவரும்ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
பிரச்சனைக்குரிய இந்த இடத்தில் கொட்டகை போடுவது என்ற தேவையில்லாதசெயலில் கிராம மக்கள் ஈடுபட வேண்டாம். படிப்படியாக போராட்டம் நடத்தி அரசின்கவனத்தை ஈர்க்க வேண்டும்.
ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறப்படும் இந்த நிலம் உங்களுக்குக் கிடைக்க எங்கள் கட்சிகுரல் கொடுக்கும். இதற்காக கிராம மக்கள் சென்னையிலோ, உள்ளூரிலோபோராட்டம் நடத்தினால் அதற்கு எங்களுடைய கட்சி சார்பில் முழு ஒத்துழைப்புகொடுப்போம்.
சிறுதாவூர் நிலப் பிரச்சனையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பழிவங்கும் நடவடிக்கையில் இந்த அரசு ஈடுபட்டுள்ளது. இன்னும் 2 நாட்களில் எங்கள்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் இது பற்றி சட்டமன்றத்தில் பேசுவார்கள்.
அதற்காகத்தான் எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் இந்த இடத்தைபார்வையிட்டு சிறுதாவூர் தலித் மக்களை சந்திக்க வந்தோம் என்றார்.
இந்த விவகாரத்தில் திருமாவளவன் மிக ஆழ்ந்த அமைதி காத்து வந்ததுகுறிப்பிடத்தக்கது. நிலப் பிரச்சனையை புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர்கிருஷ்ணசாமி கையில் எடுத்துக் கொண்டதையடுத்து ஓடி வந்துள்ளா திருமாவளவன்.
திருமா பேட்டி:
இந் நிலையில் இன்று சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,
சர்ச்சைக்குரிய சிறுதாவூர் நிலத்தை நான் நேரில் சென்றுபார்வையிட்டு ஆய்வு செய்தேன். எனக்குக் கிடைத்தஆவணங்களின்படி, தலித் மக்களுக்குச் சொந்தமானதாககூறப்படும் நிலத்தை ஆக்கிரமித்து ஜெயலலிதா தங்கும் மாளிகைகட்டப்படவில்லை.
குறிப்பிட்ட அந்த இடத்திற்கும், ஜெயலலிதா தங்கும்மாளிகைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.மாளிகையைச்சுற்றிலும் அமைக்கப்பட்டுள்ள வேலியைத் தாண்டித்தான் அந்தநிலம் உள்ளது.
தேவையில்லாமல் ஜெயலலிதா மீது பொய்யான புகார்களைக்கூறி வருகிறார் முதல்வர் கருணாநிதி. பஞ்சமி நிலத்தைஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள முரசொலி அலுவலகம், அரசுநிலத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள அண்ணாஅறிவாலயம் ஆகியவை குறித்து கருணாநிதி வாய் திறக்காமல்மெளனமாக இருப்பது ஏன் என்பதை அவர் விளக்க வேண்டும்என்றார் திருமாவளவன்.












Click it and Unblock the Notifications