சசியின் நில ஆக்கிரமிப்பு: நீதிபதி தலைமையில் விசாரணை கமிஷன் அமைப்பு!
சென்னை:
சிறுதாவூரில் தலித்துகளுக்குச் சொந்தமான நிலத்தை சசிகலாவும், அவரதுஉறவினர்களும் ஆக்கிரமித்த விவகாரம் குறித்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதிகே.டி.சிவசுபிப்ரமணியம் தலைமையிலான விசாரணைக் கமிஷன்அமைக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டசபையில், இன்று விதி எண் 110ன் கீழ் முதல்வர் கருணாநிதி அறிக்கைஒன்றை சமர்ப்பித்தார்.
அதில், காஞ்சிபுரம் மாவட்டம் சிறுதாவூரில் கடந்த 1967ம் ஆண்டு அண்ணா ஆட்சிக்காலத்தில் தலித் மக்களுக்கு வழங்கப்பட்ட 53 ஏக்கர் நிலம் சிலரால்ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
![]() |
2 மாதங்களில் இந்தக் குழு தனது விசாரணையை நடத்தி அரசிடம் அறிக்கைசமர்ப்பிக்கும்.
அந்த அறிக்கை அரசின் கைக்குக் கிடைத்தவுடன் தேவையான உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
கோட்டை நோக்கி மார்க்சிஸ்ட் பேரணி:
இந் நிலையில் சிறுதாவூர் நிலங்களை மீட்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிஇன்று கோட்டை நோக்கி பேரணி நடத்தியது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் தலைமையில்இந்தப் பேரணி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பின்னர்வரதராஜன் தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.எல்.ஏ.க்கள், சிறுதாவூரில்நிலத்தைப் பறிகொடுத்த தலித் சமூகத்தினர் கருணாநிதியை அவரது அலுவலகத்தில்சந்தித்து நிலத்தை மீட்டுத் தரக் கோரி மனு கொடுத்தனர்.
மர்ம நாவல் மாதிரி இருக்கு:
பின்னர் நிருபர்களிடம் பேசிய வரதராஜன், சிறுதாவூருக்கு ஒரு தனி தாசில்தாரையே நியமித்து, தலித் மக்களைமிரட்டி நிலத்தை அபகரித்துள்ளனர். இந்த விவகாரம் ஒரு மர்ம நாவல் மாதிரி இருக்கிறது. தான் தங்கிய இந்தபங்களா யாருடையது என்று சொல்ல ஜெயலலிதாவுக்கு தைரியமில்லை. இதனால் தான் குழப்பமானஅறிக்கைகளை வெளியிட்டு பிரச்சனையை திசை திருப்ப முயன்று வருகிறார் என்றார்.
களத்தில் கிருஷ்ணசாமி:
இதற்கிடையே புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சசிகலாவால்ஆக்கிரமிக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலத்தை பார்வையிட்டார். தலித்துகளிடமும்பேசி விவரங்கள் கேட்டறிந்தார். அப்போது, சசிகலாவின் ஆட்கள் தான் அவரதுபெயரைச் சொல்லி எங்களை நிலத்தில் கால் வைக்க விடாமல் தடுத்து, நிலத்தைஅபகரித்தனர் என தலித்துகள் தெரிவித்தனர்.
பின்னர் மதுரை சென்ற கிருஷ்ணசாமி நிருபர்களிடம்பேசுகையில்,
மகாபலிபுரம் அருகே சிறுதாவூரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சொந்தமான 61 ஏக்கர்நிலம் ஜெயலலிதாவின் தோழி சசிகலா குடியிருக்கும் பங்களாவை ஒட்டியிருப்பதால்,சசிகலா மற்றும் அவரது ஆட்கள் அபகரித்துள்ளனர்.
இது தொடர்பாக அதிமுக ஆட்சியில் தலித் மக்கள் பலமுறை பலரிடம் புகார்செய்துள்ளனர். ஆனால், ஒரு நடவடிக்கையும் இல்லை.
இப்போது இந்த நிலம் குறித்து பிரச்னை எழுந்தபிறகு கருணாநிதியின் சொத்து குறித்துகேள்வி கேட்டு ஜெயலலிதா குறித்து அறிக்கை விடுகிறார். தலித் மக்கள் கேட்பதுகருணாநிதி, ஜெயலலிதாவின் சொத்து விபரங்களை அல்ல. தங்கள் நிலத்தைத் தான்திருப்பிக் கேட்கிறார்கள்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு முழு விசாரணை நடத்தி நிலம் எப்போது,யாருடைய பேருக்கு மாற்றப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டும். இந்நிலத்தைமீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேவையெனில் அவசர சட்டம் கொண்டுவந்தாவது நிலத்தை மீட்க வேண்டும்.ஏற்கனவே டான்சி நிலத்தை திரும்பி கொடுத்ததுபோல் இந்த நிலத்தையும்ஜெயலலிதா திருப்பி கொடுக்க வேண்டும் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications