பஸ்சை மறித்து போலீஸைத் தாக்கி 2 கைதிகள் துணிகர கடத்தல்!
திருச்சி:
திருச்சி அருகே பேருந்தில் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 2 கைதிகளைஒரு கும்பல் துணிகரமாக கடத்தியுள்ளது. அதைத் தடுத்த ஏட்டையாவை அக்கும்பல்தாக்கி விட்டு இரு கைதிகளையும் கடத்திச் சென்றுவிட்டனர்.
இலங்கையைச் சேர்ந்தவர்கள் இம்தியாஸ், செல்வக்குமார். போதை மருந்துகடத்தல்காரர்களான இந்த இருவரையும் கடந்த கடந்த 2005ம் ஆண்டு பாலக்கரையில்உள்ள ஒரு விடுதியில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.அவர்களுடன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சோலை என்பவரும் கைதுசெய்யப்பட்டார். 3 பேர் மீதும் ரூ. 5.5 கோடி மதிப்புள்ள ஹெராயின் போதைப்பொருளை கடத்தியதாக வழக்கு தொடரப்பட்டது.
இவர்கள் மீது புதுக்கோட்டை போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் வழக்குநடந்து வருகிறது. இந்த வழக்கில் ஆஜர்படுத்துவதற்காக இந்த 3 பேரையும், கஞ்சாவழக்கில் கைதான சேட்டு என்கிற ஷேக் முகம்மது என்பவரையும் சேர்த்து போலீஸார்பேருந்தில் திருச்சியிலிருந்து புதுக்கோட்டைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணை முடிந்ததும் மீண்டும் திருச்சிக்கு அரசுப் பேருந்தில் ஏற்றிக் கொண்டுவந்தனர். பேருந்து கீரனூர் அருகே உள்ள களமாவூர் ரயில்வே கேட் பகுதியில மாலை4 மணியளவில் வந்து கொண்டிருந்தது.
அப்போது ஒரு கார் வேகமாக வந்து பேருந்து முன் நின்றது. காரிலிருந்து 2 பேர்இறங்கி பேருந்து டிரைவருடன் தகராறு செய்ய ஆரம்பித்தனர்.
இந் நிலையில் மேலும் 2 பேர் காரிலிருந்து இறங்கி பேருந்துக்குள் ஏறினர். இருவரும்நேராக கைதிகளுடன் அமர்ந்திருந்த போலீஸாரிடம் வந்தனர். தங்களிடமிருந்தமிளகாய்ப் பொடியை போலீஸார் மீதும், அருகில் இருந்த பயணிகள் மீதும் தூவினர்.
பின்னர் இம்தியாஸையும், செல்வக்குமாரையும் அங்கிருந்து அழைத்துச் செல்லமுயன்றனர்.
ஆனால் தலைமைக் காவலர் மகாமுனி, அந்தக் கும்பலை தடுத்து பிடிக்க முயன்றார்.இதையடுத்து மகாமுனியை அவர்கள் அரிவாளால் கையில் வெட்டினர்.
இந் நிலையில் பயணிகளில் 8 பேர் திடீரென அந்தக் கும்பலுக்கு ஆதரவாக களம்இறங்கினர். இதனால் பேருந்துக்குள் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
இந் நிலையில் அந்தக் கும்பல், அங்கிருந்து இரண்டு கைதிகளுடன் தப்பிச் சென்றது.
இலங்கை கைதிகள் தப்பி ஓடியபோது கஞ்சா வழக்கில் சிக்கிய சோலையும் தப்பிஓடினார். போலீஸார் பேருந்திலிருந்து இறங்கி சோலையை விரட்டிப் பிடித்துவிட்டனர். ஆனால் இம்தியாஸ், செல்வக்குமார் இருவரும் காரில் ஏறித் தப்பிவிட்டதால் அவர்களைப் பிடிக்க முடியவில்லை.
இந்த துணிகர கடத்தல் குறித்து பேருந்து ஓட்டுனர் பாண்டியராஜ் காவல் நிலையத்தில்புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த இடத்தை ஐ.ஜி. ஜாபர் சேட், டிஐஜி, திருச்சி,புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பிக்கள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
மிகுந்த பாதுகாப்புடன் கொண்டு சென்றிருக்க வேண்டிய கைதிகளைஅஜாக்கிரதையாக கொண்டு சென்றதுதான் இரு கைதிகளும் தப்ப காரணமாகிவிட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், சப் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், தலைமைக்காவலர் மகாமுனி, காவலர் பரமசிவம் ஆகியோரை திருச்சி ஆணையர் சுனில்குமார்சிங் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications