சிதம்பரம் நடராஜர் கோவில் சர்ச்சை: தீக்ஷிதர்கள் இன்று முக்கிய ஆலோசனை!
சிதம்பரம்:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவராம், திருவாசகம் பாட அனுமதிக்காததுதொடர்பாக இன்று கோவில் தீக்ஷிதர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கூடிமுக்கிய ஆலோசனை நடத்துகின்றனர்.
சிதம்பரத்தில் உள்ள பிரபலமான நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம்ஆகியவற்றைப் பாட, கோவிலை நிர்வகித்து வரும் தீக்ஷிதர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிதம்பரம் நீதிமன்றத்தில் தடை உத்தரவும்வாங்கி வைத்துள்ளனர்.சமீபத்தில் கூட ஒரு புலவர், திருவாசகம் பாடுவதற்காக நடராஜர் கோவிலுக்கு தமிழ்ஆர்வலர்களுடன் கிளம்பியபோது போலீஸாரால் தடுக்கப்பட்டார். கோவிலுக்குள்தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க மாட்டோம் என்று தீக்ஷிதர்கள் முரண்டுபிடித்து வருகின்றனர்.
தமிழக கோவிலில் தமிழில் பாட அனுமதி மறுப்பதா என்ற ஆதங்கம் எழுந்துள்ளது.
இந்த விவகாரம் சட்டசபையிலும் எதிரொலித்தது. இதுகுறித்து முதல்வர் கருணாநதிகூறுகையில், தமிழில் பாட தமிழக கோவிலில் அனுமதி மறுக்கப்படுகிறது. இதற்குசட்டப்பூர்வமான தடைகளும் காரணம் காட்டப்படுகிறது. இதுகுறித்து சட்டவல்லுனர்களுடன் விவாதித்து தமிழுக்கு ஏற்பட்டுள்ள தடையை நீக்குவது குறித்துமுடிவெடுக்கப்படும் என்றார்.
முதல்வரின் கருத்து தீக்ஷிதர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், நடராஜர் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகம் பாட சிதம்பரம் நீதிமன்றம்விதித்திருந்த தடையுத்தரவு நேற்றுடன் முடிந்தது.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தடையை நீடிக்கக் கூடாது என்றுதமிழார்வலர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடினர். ஆனால் தீக்ஷிதர்கள்சார்பில் வக்கீல்கள் ஆஜராகவில்லை. இதையடுத்து வழக்கு இன்றைக்குஒத்திவைக்கப்பட்டது.
இந் நிலையில் தீக்ஷிதர்களுக்கு ஆதரவாக அர்த்தஜாம சிவபுராண வழிபாட்டுக் குழு,தில்லை திருமறை கழகம், பவுர்ணமி வழிபாட்டுக் குழு, தில்லை காளி வாரவழிபாட்டு மன்றம் ஆகியவை கிளம்பியுள்ளன.
இந்த அமைப்பினர் இன்று மாலை சிதம்பரம் வடக்கு வீதியில் உள்ள நடராஜர் கிருபாதிருமண மண்டபத்தில் கலந்துரையாடல் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தள்ளனர். இதில்தீக்ஷிதர்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுதொடர்பான அழைப்பிதழில், தமிழை மட்டுமே தாய் மொழியாகக் கொண்டதீக்ஷிதர் சமுதாய பெருமக்கள், தமிழுக்கு விரோதிகள் போல ஒரு மாயைஉருவாக்கப்படுகிறது. அதையே காரணம் காட்டி, பாரம்பரியமாக நமது முன்னோர்கள்ஏற்படுத்தியுள்ள ஆலய வழிபாட்டு முறைகளை விமர்சனம் செய்து ஒரு கூட்டம் வீண்பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
எனவே நடராஜ பக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து கலந்துரையாடல் கூட்டத்தில்கலந்து கொள்ள வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் தீக்ஷிதர்கள் தரப்பில் என்ன முடிவெடுக்கப்படும் என்றஎதிர்பார்ப்பு தமிழார்வலர்களிடையே எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications