இந்தியாவுடன் அணுசக்தி ஒப்பந்தம்-அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்
வாஷிங்டன்:
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்தியா-அமெரிக்கா இடையிலான சிவில் அணு சக்திஒப்பந்தத்திற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை (ஹவுஸ் ஆப்ரெப்சன்டேவிஸ்) ஒப்புதல் அளித்துள்ளது. ஒப்பந்தத்திற்கு ஆதரவாக 359ஓட்டுக்களும், எதிராக 68 வாக்குகளும் கிடைத்தன.
இந்தியா, அமெரிக்கா இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம், அமெரிக்க அணு சக்தி தொழில்நுட்பம், அணு உலைகளுக்குத் தேவையானஎரிபொருள் உள்ளிட்டவை இந்தியாவுக்குக் கிடைக்கும்.இந்த வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த ஒப்பந்தம் அமலாக அமெரிக்க நாடாளுமன்றத்தின்இரு அவைகளும் ஒப்புதல் தர வேண்டும்.
அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதற்கான தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள்சபையான காங்கிரசில் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் மீது கிட்டத்தட்ட ஐந்துமணி நேரம் காரசாரமான விவாதம் நடந்தது.
அதன் இறுதியில் தீர்மானம் ஒட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது தீர்மானத்திற்குஆதரவாக 359 பேரும், எதிராக 68 பேரும் வாக்களித்தனர்.
ரிபப்ளிகன்ஸ், டெமாக்ரேட்க்ஸ் ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இந்தத்தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.
இதன்மூலம் இந்திய, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை அமலாக்க அமெரிக்கஅரசுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இதனால் இந்தியாவுக்கு அணு சக்தி தொழில்நுட்பம் மற்றும் எரிபொருள்வழங்குவதற்கு அமெரிக்கா விதித்திருந்த 30 ஆண்டு கால தடை முடிவுக்கு வருகிறது.அதிபர் புஷ்ஷுக்குக் கிடைத்த தனிப்பட்ட வெற்றியாக இது கருதப்படுகிறது.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் அணு சக்தி ஆய்வுக்கு அமெரிக்கா முழுஒத்துழைப்பு அளிக்கும். பதிலுக்கு, சர்வதேச அணு சக்தி கழகத்தின்கண்காணிப்புக்கும் ஆய்வுக்கும் தனது அணு நிலையங்களை இந்தியா அனுமதிக்கவேண்டும்.
முன்னதாக இந்த ஒப்பந்தத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்று அமெரிக்கநாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தில் திருத்தங்கள்செய்வதை இந்தியா ஏற்றுக் கொள்ளாது என்று பிரதமர் மன்மோகன் சிங்திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந் நிலையில் புஷ்சும்-சிங்கும் அமெரிக்காவில் ஒப்புக் கொண்ட ஒப்பந்தத்தில் எந்தமாற்றமும் செய்யாமலேயே பிரதிநிதிகள் சபையில் ஒப்புதல் கிடைத்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications