இலவச கலர் டிவி: வீடியோகான், 2 நிறுவனங்கள்தயாரித்து வழங்கும்- ஒரு டிவி விலை ரூ.2,965
சென்னை:
தமிழக அரசு வழங்கவுள்ள இலவச கலர் டிவிகளை வீடியோகான் உள்ளிட்ட 3நிறுவனங்கள் தயாரித்து வழங்கவுள்ளன. டிவியில் தமிழக அரசின் முத்திரைபதிக்கப்பட்டிருக்கும்.
திமுக தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு இலவச கலர் டிவி வழங்கப்படும் எனஉறுதிமொழி தெரிவிக்கப்பட்டிருந்தது.ஆட்சிக்கு வந்தவுடன் இந்தத் திட்டம் தொடர்பாக பரிசீலிதது முடிவெடுக்க முதல்வர்கருணாநிதி தலைமையில் அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழு நியமிக்கப்படடது.ஆனால், இதில் சேர அதிமுக, மதிமுக ஆகியவை மறுத்துவிட்டன.
இதைத் தொடர்ந்து டிவிக்கள் வழங்க தேசிய அளவிலான டெண்டர் விட்டது தமிழகஅரசு. 10க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் டிவிக்களை தமிழக அரசுக்கு விற்க முன்வந்தன.
இந் நிலையில் கருணாநிதி தலைமையில், அனைத்துக் கட்சி எம்.எல்.ஏக்கள் குழுவின்கூட்டம் நடைபெற்றது. அதில், அமைச்சர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் சுதர்சனம்,பாமகவின் ஜி.கே.மணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சிவபுண்ணியம், மார்க்சிஸ்ட்கட்சியின் கோவிந்தசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செல்வப் பெருந்தகைஆகியோர் கலந்து கொண்டனர்.
இக் கூட்டத்தில் டெண்டர்கள் வழங்கிய நிறுவனங்களில் இறுதி செய்யப்பட்டுள்ளடிவி நிறுவனங்கள் குறித்து உறுப்பினர்களுடன் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
அதன்படி டெல்லியைச் சேர்ந்த வீடியோகான், மும்பையைச் சேர்ந்த கிச்சான்அப்ளையன்ஸ், உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த டிக்சன் டெக்னாலஜி ஆகிய 3நிறுவனங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளன.
இதில் வீடியோகான் நிறுவனம் முதல் கட்டமாக 15,000 டிவிகளை தயாரித்துவழங்கும். மற்ற இரு நிறுவனங்களும் தலா 7,500 டிவிக்களை தயாரித்து வழங்கும்.
டிவியின் முன் பகுதியில் முதல்வர் கருணாநிதியின் படம் இடம் பெற வேண்டும் எனஉறுப்பினர்களில் சிலர் வலியுறுத்தினர். ஆனால், அதை கருணாநிதி ஏற்கவில்லை.
மாறாக, தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சின்னமான கோபுர சின்னம் பொறிக்கப்படும்என்று அவர் அறிவித்தார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டசபையில் இன்று வெளியிடப்படும்.செப்டம்பர் 15ம்தேதி அண்ணா பிறந்த நாள் முதல் இலவச கலர் டிவி வழங்கும்திட்டம் அமலுக்கு வருகிறது.
இந்த ஆண்டு சமத்துவபுரங்களில் வசிப்போருக்கு மட்டும் 30,000தொலைக்காட்சிப்பெட்டிகளை வழங்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் இன்று காலை சட்டசபை கூடியதும் விதி எண் 110ன் கீழ் உள்ளாட்சித்துறை அமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வாசித்தார். அவர் கூறுகையில்,
தொழில்நுட்பத் தகுதிகள், விலைப்புள்ளி ஆகியவற்றின் அடிப்படையில் 7நிறுவனங்கள் இறுதிக் கட்டப் பரிசீலனைக்குத் தேர்வு செய்யப்பட்டன. அதில் மிகக்குறைந்த விலையாக ரூ. 3,008.55 என்று தெரிவித்திருந்த வீடியோகான் நிறுவனத்தைஅழைத்து ஒரு டிவியின் விலையை ரூ. 2,965 என்று பேசி முடிவு செய்யப்பட்டது.
இந்த நிறுவனம் குறிப்பிட்ட காலத்தில் 15,000 டிவி பெட்டிகளை தயாரித்து வழங்கும்.அதேபோல மும்பையைச் சேர்ந்த கிச்சன் அப்ளையன்ஸ் மற்றும் டிக்சன்டெக்னாலஜிஸ் நிறுவனம் ஆகியவை தலா 7,500 டிவி பெட்டிகளை தயாரித்துவழங்கும் என்று தெரிவித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications