ரூ. 4 கோடி மோசடி: பிரபல தொழிலதிபர் கைது -ரஜினியுடன் நடித்தவர்!
சென்னை:
சிமென்ட்ஆலை அமைப்பதாக கூறி ரூ. 4 கோடி பணத்தை மோசடி செய்ததாக நாகையைச் சேர்ந்த பிரபலதொழிலதிபர் மாயா வெங்கடேசனை சென்னை போலீஸார் கைது செய்தனர். இவர் படையப்பா படத்தில்ரஜினியுடன் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் செம்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் மாயா வெங்கடேசன். சாதாரணவிவசாயக்குடும்பத்தைச் சேர்ந்த மாயா, கிராமத்தில் ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார். பின்னர்சென்னைக்கு வந்து சாலிகிராமத்தில் குடியேறினார்.அங்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் இன்னொரு நடிகையிடம் கார் டிரைவராக இருந்தார். அந்தப் பழக்கத்தில்அவர்கள் நடித்த படங்களில் சிறுசிறு வேடத்தில் நடித்துள்ளார். பொட்டு அம்மன் படத்தில் சண்டைக்காட்சியில்நடித்தார். அதேபோல ரஜினியின் படையப்பா படத்திலும் சண்டைக் காட்சியில் நடித்துள்ளார்.
பின்னர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார். அதில் அவருக்கு நல்ல வருமானம் வந்தது. இதனால்படிப்படியாக பொருளாதார ரீதியாக உயர ஆரம்பித்தார். தாம்பரம் அருகே மீன் பண்ணையை ஆரம்பித்தார்.வீரபாண்டிய கட்டபொம்மன் நற்பணி மன்றம் என்ற பெயரில் சமூக சேவை அமைப்பை நடத்தி வந்தார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் சமாஜவாடி கட்சி சார்பில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியைத்தழுவினார். இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிமென்ட் ஆலை ஆரம்பிக்க முடிவு செய்தார் மாயா.இதற்கான பூமி பூஜை விழா கடந்த 2004ம் ஆண்டு நடந்தது.
அதில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர். வெங்கட்ராமன், சங்கரராமன் கொலை வழக்கில் சிக்கியுள்ளஜெயேந்திரர் ஆகியோரும வந்துள்ளனர். அவர்களை சென்னையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் விழா நடந்தஇடத்திற்கு அழைத்துச் சென்றாராம் மாயா.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாயாவின் வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனைநடத்தினர். இதில், அவர் பல வருடங்களாக வருமானவரி கட்டாததும், ரிட்டர்ன் தாக்கல் செய்யாததும் தெரியவந்தது. இதையடுத்து நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்திற்கு விசாரணைக்கு வருமாறுபணித்தனர்.
இந்த நிலையில் மாயா, சிமென்ட் ஆலை தொடர்பான பல்வேறு பணிகளை மேற்கொள்ள காண்டிராக்ட் தருவதாககூறி ரூ. 4 கோடி பணத்தை ஏமாற்றி விட்டதாக அவர் மீது ஆந்திராவைச் சேர்ந்த சதீஷ்பாபு, வெங்கட்ரமணரெட்டி, நெய்வேலி அசோக் குமார், ராஜேந்திரன், முரளிதரன், கேரளாவின் அனில் ஆகியோர் சென்னை மாநகரஆணையரிடம் புகார் கொடுத்தனர்.
இந்தப் புகாரை விசாரித்த போலீஸார் மாயாவைக் கைது செய்ய முடிவு செய்தனர்.நேற்று வருமானவரித்துறை அலுவலகத்திற்கு வந்த மாயாவை, விசாரணை முடிந்து வெளியே வந்தபோதுபோலீஸார் மடக்கிக் கைது செய்தனர். பின்னர் சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு மாயாவை அழைத்துச்சென்றனர்.
அங்கு வைத்து அவரது கார், கைத்துப்பாக்கி, 3செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.பின்னர் அவரிடம் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டது.அதன் பிறகு அவர் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மாயா வெங்கடேசன் போலீஸாரிடம் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், வயிற்றுப் பிழைப்புக்காகத் தான்சென்னைக்கு வந்தேன். முதலில் டாக்சி டிரைவராக இருந்தேன். பிறகு சினிமா பிரகர்களுடன் பழக்கம் ஏற்பட்டது.ஸ்டண்ட் நடிகராகவும் சிறு சிறு வேடங்களில் நடித்தேன். பிறகு டிராவல்ஸ் தொடங்கினேன்.
சாலிகிராமத்தில் வாடகை வீட்டில் இருந்தபோது விசாலாட்சி என்பவரை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டேன். அவர் மூலம் 2 மகள்கள் உள்ளனர். பின்னர் வசதி வாய்ப்பு வந்ததும், தூத்துக்குடியைச் சேர்ந்தஎனது மாமன் மகளை 2வ து கல்யாணம் செய்து கொண்டேன்.
சிமென்ட் ஆலை அமைக்க விரும்பி முறையாக அரசு அனுமதி பெற்றுத்தான் பூமி பூஜை போட்டேன். ரூ. 320கோடியில் ஆலையை நிறுவ முடிவு செய்திருந்தேன். ஆனால் முதலில் நான் பார்த்து வைத்திருந்தஇடம்,கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம் அருகே இருப்பதால் அனுமதி தர மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மறுத்துவிட்டது. இதனால் வேறு இடத்திற்குத் திட்டத்தை மாற்றினேன்.
இந்த நிலையில் என்னைப் பற்றி தவறான செய்திகளை சில பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதனால், எனக்குவங்கிகள் கடன்தர மறுத்து விட்டன. இதனால் தான் சிக்கலாகி விட்டது. நான் யாரையும் ஏமாற்றநினைக்கவில்லை. முறையாக எழுதிக் கொண்டுதான் காண்டிராக்ட் போட்டேன்.
நிரபராதி என்று நிரூபித்து வெளியே வந்து வாங்கிய பணத்தையெல்லாம் கொடுத்து விடுவேன் என்றுகூறியுள்ளார் மாயா.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications