தலித் நிலம்: ஜெவுக்கு சம்பந்தமில்லை-வைகோ
சென்னை:
சிறுதாவூர் நில விவகாரத்தில் ஜெயலலிதாவுக்கு சம்மந்தமும் இல்லை என மதிமுகபொது செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இதுகுறித்து ஜெயா டிவியில் அவர் அளித்த பேட்டி:சிறுதாவூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தங்குவதற்கு பயன்படுத்துகின்ற வீடுதலித் மக்களுக்கு 1967ம் ஆண்டு அரசு ஒதுக்கிய நிலங்களை ஆக்கிரமித்துக்கட்டப்பட்டது என்று முழுக்க முழுக்க பொய்யான புகார் எழுப்பப்பட்டு உள்ளது.இந்த பிரச்சனை குறித்து உண்மை நிலையை சிறுதாவூர் மக்களிடம் நேரில் விசாரித்துஅறிய மறுமலர்ச்சி திமுக சார்பில் துணைப் செயலாளர் மல்லை சத்யா தலைமையில்,காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலாளர் பாலவாக்கம் சோமு, மதிமுக சட்டமன்றத்கட்சித் துணைத் தலைவர் வீர.இளவரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.ஞானதாஸ்,சதன் திரு மலைக்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று சிறுதாவூர் சென்றனர்.
ஊர் மக்கள் ஒட்டு மொத்தமாகச் சொன்ன செய்திகளில் இருந்தும், திரட்டப்பட்டவருவாய்த்துறை ஆவணங்களில் இருந்தும், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாதங்குவதற்குப் பயன்படுத்தும் வீடு, சுற்று அடைப்புக்கு உள்பட்ட இடமும், தலித்மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிறிது அளவும் அமையவில்லை என்பதுதெரிகிறது.
1967 செப்டம்பர் 15ல் சிறுதாவூரில் உள்ள நிலம் விவசாயத் தொழிலாளர்களைக் குடிஅமர்த்தும் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கு இரண்டரை ஏக்கர் நிலமும், பத்துசெண்டு மனையும் வழங்க்படும் என்று அரசு அறிவித்தது.
அதே செப்டம்பர் 30ம் தேதி துணை ஆட்சியர் தலைமையில் அமைக்கப்பட்ட குழுபயனாளிகளைத் தேர்வு செய்தது. 20ம் தேதி தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுள்தலித் அல்லாத ஏழைகளும் இடம் பெற்று இருந்தனர்.
இப்படி ஒதுக்கப்பட்ட இடம் மழைக்காலத்தில் வெள்ளம் நிரம்புகிற தாழ்வான பகுதிஎன்பதாலும் சாகுபடிக்கு ஏற்றதாக இல்லாததாலும் அதிகமான விலை மதிப்பு இல்லாதநிலையில் சில ஆண்டுகளில் இந்த நிலங்களை பிறருக்கு விற்று விட்டனர்.
பலருக்கு நிலம் கை மாறிய நிலையில் 2005யில் பரணி ரிசார்ட்ஸ் காட்டேஜ் ரிசார்ட்ஸ்உரிமையாளர்கள் விலைக்கு வாங்கி உள்ளனர்.
நிலைமை இப்படி இருக்கு நிலம் பெற்ற வாரிசுகளுக்கு ஆசை வார்த்தை காட்டிமுன்னாள் முதல்வர் மீது புகார் கூறவும், வெளியில் இருந்து ஆள்களைக் கொண்டுபோய் போராட்டம் நடத்தவும் திமுக தலைமை தூண்டுதலின் பேரில் நடவடிக்கைகள்முடுக்கி விடப்பட்டு இருக்கிறது.
ஜெயலலிதாவுக்கு அவப் பெயரை உண்டாக்கவும், அரசியல் பழிவாக்கும் நோக்கத்தோடும் சிறுதாவூர் பிரச்சனை எழுப்பப்பட்டு இருக்கிறது. இது பற்றி உண்மைகளைஅறிய வருவாய்த்துறை அதிகாரிகளின் அறிக்கையை பெற்றாலே போதுமானது.
ஆனால் இல்லாத ஒன்றை இருப்பதாக காட்டவும், நடக்காத ஒன்றை நடந்ததாகச்சொல்லவும் திட்டமிட்டு, ஒரு கோரிக்கையை தரச் செய்து உயர்நீதீமன்ற முன்னாள்நீதிபதி விசாரணைக் கமிஷனை முதல்வர் அவசர அவசரமாக சட்டமன்றத்தில்அறிவித்துள்ளார்.
1996ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பஞ்சமி நிலங்களையெல்லாம் மீட்டுக்கொடுப்போம் என்று கூறிய திமுக அந்த வாக்குறுதியை துளியும் நிறைவேற்றவில்லை. சிறுதாவூர் பிரச்சனையில் விசாரணைக்கு கமிஷன் அமைத்துஇருப்பது முற்றிலும் தேவையற்ற ஒன்று.
அண்ணா அறிவாலயமும், முரசொலி அலுவலகக் கட்டடமும் தலித்களின் நிலங்களைஆக்கிரமித்து தான் கட்டப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு உள்ளது. இதுதொடர்பாகவும் விசாரணை நடத்த கருணாநிதி முன் வருவாரா என்றார் வைகோ.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications