மனைவியை வெறித்தனமாக குத்திக் கொன்ற ஊனமுற்ற சிங்கப்பூர் தமிழர்!
சிங்கப்பூர்:
மனைவியை வெறித்தனமாக குத்திக் கொன்றதாக சிங்கப்பூரைச் சேர்ந்த இருகால்களும் இல்லாத 51வயது தமிழர் மீது சிங்கப்பூர் நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள புகிட் பட்டோக் குடியிருப்பில் வசித்துவந்தவர் ரெஜினா தேவசகாயம் (வயது 45). இவரது கணவர் பிரான்ஸிஸ செல்வராஜ்(வயது 51).சர்க்கரை வியாதி காரணமாக செல்வராஜின் இரு கால்களும் அறுவைச் சிகிச்சை மூலம்துண்டிக்கப்பட்டு விட்டன. இதனால் அவரால் வேலை பார்கக முடியவில்லை.வீட்டோடு இருந்து வந்தார்.
ரெஜினா துப்புறவு வேலையில் ஈடுபட்டு தனது கணவரைக் காப்பாற்றி வந்தார். இந்தநிலையில், 12 நாட்களுக்கு முன்பு அதிகாலையில் சமைலயலுக்குப் பயன்படுத்தும்கத்தியை எடுத்து தனது மனைவியை குத்தினார் செல்வராஜ். சரமாரியாக அவர்குத்தியதில் ரெஜினா ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது உடலில் ஐந்து இடங்களில்கத்திக் குத்து விழுந்தது.
தாயின் கூக்குரல் கேட்டு இன்னொரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த அவரது இருதிருமணமான மகள்களும், ஒரு மகனும் விரைந்து வந்து பார்த்தபோது ரெஜினாஉயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.
உடனடியாக அவர் அங்கிருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். தீவிரசிகிச்சை அளித்தும் அவர் 12 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார். மனைவியைக்கொலை செய்த குற்றத்திற்காக செல்வராஜை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications