ரூ. 2 கோடி அன்பளிப்பு- ஜெ மீது சிபிஐ குற்ற பத்திரிக்கை தாக்கல்
சென்னை:
வெளிநாட்டில் இருந்து ரூ. 2 கோடி அன்பளிப்பு வந்தது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், அழகு திருநாவுக்கரசு ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கில்சிபிஐ இன்று குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.
ஜெயலலிதா முதலாவது முறை முதல்வராக இருந்தபோது, 1992ம் ஆண்டில் அவரது பிறந்தநாளையொட்டி 88 டிடிக்கள் வந்தன. அவற்றின் மதிப்பு ரூ. 2 கோடி.இதையடுத்து ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி அவர் மீது வழக்கு பதிவு செய்தது சிபிஐ.
நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில், குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் சிபிஐக்கு அனுமதிஅளித்தது.
எம்எல்ஏவான ஜெயலலிதா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி கோரிசபாநாயகர் ஆவுடையப்பனுக்கு சிபிஐ கடிதம் அனுப்பியது. இதற்கான அனுமதியைஆவுடையப்பன் வழங்கினார்.
இதையடுத்து இன்று சென்னையில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது2,000 பக்கங்கள் கொண்ட குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
முதன்மை சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி மீனாட்சி சுந்தரத்திடம் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது. இந்தவழக்கில் 285 ஆவணங்களையும், 149 சாட்சிகளையும் சிபிஐ சேர்த்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications