புதுவை-புதிய வரிகள் இல்லா பட்ஜெட் தாக்கல்

Subscribe to Oneindia Tamil

பாண்டிச்சேரி:

ரூ. 2,686 மதிப்பிலான புதுவை மாநில பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடியது. நிதித்துறை பொறுப்பு வகிக்கும்முதல்வர் ரங்கசாமி புதுவை அரசின் 2006-2007ம் ஆண்டுக்கான பட்ஜெட்டைதாக்கல் செய்தார். பட்ஜெட்டில் புதிய வரிகள் விதிக்கப்படவில்லை.

பட்ஜெட் தாக்கல் செய்து முதல்வர் ரங்கசாமி கூறியதாவது:வணிகர்கள், தாவர எண்ணை மற்றும் சமையல் எண்ணை ஆகியவற்றிற்கு 4 சதவீதவிற்பனை வரி நீக்கப்படுகிறது.

காரைக்கால் வளர்ச்சி பணிகளை விரைவாகவும் ஒருங்கிணைந்து செயல்படுத்தும்வகையிலும் போதிய நிதி ஆதாரங்களுடன் செயல் பட காரைக்கால் மேம்பாட்டுமுகவாண்மை ஒன்று அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் மற்றும் பிற அந்நிய சக்திகளின் ஊடுருவலை தடுக்கவும் நமதுஆட்சி பரப்பு கடல் பகுதியை விழிப்புடன் கண்காணிக்கவும் காரைக்காலில் கடலோரகாவல் நிலையம் அமைக்கப்படும்.

காவல்துறைக்கு உதவி தற்போதுள்ள 440 ஊர்காவல் படை வீரர்களுடன் மேலும் 330ஊர்க் காவல்படை வீரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். ஏனாமில் புதிய பஸ்நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுவை பகுதியில் உள்ள கிராமங்களை தூய்மையாக பேணிக் காக்க ஒரு புதியதிட்டம் அமலாக்கப்படும். இதன்படி ஒவ்வொறு கிராமத்திலும் ஒரு சுய உதவி குழுஅமைக்கப்படும். இக்குழுவிற்கு கிமாத்தை தூய்மையாக வைத்திருக்க மாதம் ரூ.5,000 முதல் 10,000 வரை வழங்கப்படும்.

குப்பைகளை அள்ள ஒவ்வொரு குழுவிற்கும் சைக்கிள், தள்ளுவண்டி அளிக்கப்டும்.இதனால் கிராம புறங்களில் உள்ள 3,000 பெண்களுக்கு வேலை கிடைக்கும்.

புதுவை நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்துச நெரிசலை குறைக்க கிழக்கு கடற்கரைசாலையில் ரூ.40 கோடி செலவில் ஒருங்கிணைந்த அங்காடி கட்டஉத்தேசிக்கப்பட்டுள்ளது. கலாசார நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் வண்ணம்மேட்டுப்பாளையத்தில் கலை அரங்கம் கட்டப்படும்.

காரைக்காலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் குறைந்த செலவில் தங்கும் வகைகயில்காரைக்கால் பஸ் நிலையம் பின்புறம் வணிக வளாகத்துடன் கூடிய யாத்திரிகள் விடுதிகட்ட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ஏனாமில் துப்புரவு பணியாளர்களுக்கு ரூ.1 கோடி செலவில் குடியிருப்புகள்கட்டப்படும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு மேம்பாட்டு திட்டங்களை தயாரிக்கமாவட்ட திட்டகுழுக்கள் அமைக்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களை சேர்ந்த விதவைகளுக்கு மற்றும்அவர்கள் மகள்களின் திருமணத்திற்கு அளிக்கப்டும் நிதியுதவி ரூ.15,000த்திலிருந்துரூ.20,000மாக உயர்த்தப்படும் என பட்ஜெட்டில் கூறுப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+