லெபனான் கைதிகளை விடுவிக்க முன் வரும் இஸ்ரேல்
ஜெருசலேம்:
பெற்றோருக்கு பயந்து தர்மபுரியிலிருந்து ரயில் ஏறி சேலத்துக்கு வந்த மூன்று பள்ளிமாணவிகளை சென்னைக்கு அழைத்து செல்வதாக கூறி கடத்த முயன்றவர்பிடிபட்டார்.
ஹிஸ்புல்லா அமைப்பு பிடித்து வைத்துள்ள இரண்டு இஸ்ரேல் வீரர்களைவிடுவிப்பதற்காக, லெபனான் வீரர்கள் இருவரை விடுவிக்க இஸ்ரேல் முன்வந்துள்ளதாகத் தெரிகிறது.இஸ்ரேல் ராணுவ வீரர்கள் 2 பேரை ஹிஸ்புல்லா படையினர் பிடித்துச்சென்றதையடுத்து கடந்த 3 வாரமாக லெபனானை துவம்சம் செய்து வருகிறதுஇஸ்ரேல்.
இஸரேலின் ஆவேசத் தாக்குதலில் இதுவரை 700க்கும் மேற்பட்ட லெபனானியர்கள்உயிரிழந்துள்ளனர். 8 லட்சம் பேர் வீடுகளை விட்டு இடம் பெயர்ந்துள்ளனர்.
ஆனாலும் ஹிஸ்புல்லா தொடர்ந்து பதிலடி தந்து வருகிறது. அந்த அமைப்பினரைஇதுவரை இஸ்ரேலால் முழுமையாக ஒடுக்க முடியவில்லை.
இந் நிலையில், ஹிஸ்புல்லா படையினர் வசம் உள்ள 2 வீரர்களை மீட்பதற்காகலெபனான் வீரர்கள் இருவரை விடுவிக்க இஸ்ரேல் முன் வந்துள்ளதாகஇஸ்ரேலிலிருந்து வெளியாகும் ஹராட்ஸ் நாளிதழ் செய்தி வெளியிடடுள்ளது.
இருப்பினும் இந்த செய்தியை இஸ்ரேல் அரசு உறுதிப்படுத்தவில்லை.ஹிஸ்புல்லா பிடியில் உள்ள இஸ்ரேல் வீரர்கள் எல்டாட் ரெஜேவ் மற்றும் எஹூத்கோல்ட்வாசர் ஆகியோரை ஹிஸ்புல்லா விடுவித்தால்,லெபனான் ராணுவ வீரர் அபுஅம்ரா மமத் மற்றும் இன்னொரு வீரரை விடுவிக்க தயாராக இருப்பதாக இஸ்ரேல்கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இருப்பினும், கடந்த 1979ம் ஆண்டு கைது செய்யப்படட லெபனான் வீரர் சமீர்குவாண்டரை விடுவிக்க இஸ்ரேல் மறுத்து விட்டது.
1979ம் ஆண்டு இஸ்ரேலில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தில் ஒரு போலீஸ்காரர்,ஒரு சிவிலியன் மற்றும் அவரது 4 வயது மகள் ஆகியோர் கொல்லப்படடனர். அந்தசம்பவத்தைத் தொடர்ந்து குவாண்டரை இஸ்ரேலிய படைகள் பிடித்தன.
நீண்ட காலமாக குவாண்டர் இஸ்ரேலிய சிறையில் அடைபட்டுள்ளார்.கைதிகளை இஸ்ரேலும்,லெபனானும் பரிமாறிக்கொள்வது புதிதல்ல என்பதுகுறிப்பிடத்தக்கது.
கடந்த 2004ம் ஆண்டு ஹிஸ்புல்லா அமைப்பினரால் கொல்லப்பட்ட 3 இஸ்ரேலியராணுவ வீரர்களின் உடல்களை அந்த அமைப்பு இஸ்ரேலிடம் ஒப்படைததது.அதேபோல கடத்தப்பட்ட இஸ்ரேலிய தொழிலதிபரையும் ஹிஸ்புல்லா அமைப்பினர்இஸ்ரேலிடம் ஒப்படைத்தனர்.
இதற்குப் பதிலாக 400 பாலஸ்தீனியர்கள், 23 லெபனானியர்கள் மற்றும் அரபுக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது.
ஜெர்மனியின் மத்தியஸ்த்தின் பேரில் அந்தப் பரிமாற்றம் நடந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications