அதிகாரி விட்ட பளார்: தற்கொலைக்கு முயன்ற இன்ஸ்பெக்டர்
சென்னை:
கன்னத்தில் அறைந்து தனது மேலதிகாரி அவமானப்படுத்தியதால், மனம் உடைந்தசென்னை போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்றார். இதனால் சென்னைமாநகர காவல்துறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தில் அந்த இன்ஸ்பெக்டர்பணியாற்றி வந்தார்.சேப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சிப் பிரமுகர் ஒருவர்,ஒரு வழக்குத் தொடர்பாக இன்ஸ்பெக்டரை அணுகி தனக்கு சாதகமாக நடக்குமாறுகோரியுள்ளார்.ஆனால் இதற்கு அந்த இன்ஸ்பெக்டர் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்துஅந்த ஆளுங்கட்சிப் பிரமுகர், இன்ஸ்பெக்டரின் மேலதிகாரியிடம் சென்று, உங்களதுபெயரைச் சொல்லி இன்ஸ்பெக்டர் என்னிடம் ரூ.30,000 பணம் வாங்கி விட்டதாகபுகார் கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த அதிகாரி, இன்ஸ்பெக்டரை தனது அலுவலகத்திற்குஅழைத்துள்ளார். அவர் வந்தவுடன் என்ன ஏது என்று கூட விசாரிக்காமல், பிறஊழியர்கள் முன்னிலையில் இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் பளார் என அறைந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர், மனம் உடைந்த நிலையில் வீட்டுக்குத்திரும்பியுள்ளார். ஏராளமான தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார்.
பதறிப் போன அவரது குடும்பத்தினர், உடனடியாக தனியார் மருத்துவமனைக்குஅவரை அழைத்துச் சென்று சேர்த்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின்னர் அந்தஇன்ஸ்பெக்டர் உயிர் பிழைத்துள்ளார்.
இந்த சம்பவம் காவல்துறையில் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
நிலைமை மோசமாவதை உணர்ந்த அந்த அதிகாரி, இன்ஸ்பெக்டர் வீட்டைத்தொடர்புகொண்டு, நடந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்ததோடு, பிரச்சினையைபெரிதாக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டாராம்.
இதனால் இன்ஸ்பெக்டரும் நடந்ததை மறந்து விட்டு பணியில் சேர்ந்துள்ளார். ஆனால்தற்போது அவர் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தினமும் மாநகர காவல்துறை ஆணையரகத்தில் ரிப்போர்ட் செய்யுமாறும் அவர்பணிக்கப்பட்டுள்ளார்.
அப்ப அந்த ஆளுங்கட்சி ஆசாமியை விட்டாச்சா..? அவருக்கு தண்டனைகிடையாதா?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications