மைனாரிட்டி.. மைனாரிட்டி.. மைனாரிட்டி: ஜெ
சென்னை:
மைனாரிட்டி திமுக அரசு சீனா, தைவான் நாடுகளில் இருந்து மலிவு விலையில்இறக்குமதி செய்யப் போகும் இலவச டிவி தரமானதாக இருக்காது என அதிமுகபொதுச்செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,மைனாரிட்டி திமுக அரசு தாக்கல் செய்துள்ள நிதி நிலை அறிக்கையில் வருகிறசெப்டம்பர் மாதத்தில் 30,000 கலர் டிவி வழங்கப்படும் என்றுஅறிவிக்கப்பட்டிருக்கறது. இதற்காக பட்ஜெட்டில் கலர் டிவி வாங்குவதற்காக ரூ.750கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக 30,000 கலர் டிவி வெளிப்படையான தேதிய ஒப்பந்தப்புள்ளிமுறையில் கொள்முதல் செய்யப்படும் என்றும், அடுத்த கட்டமாக தேவைப்படும் கலர்டிவி வெளிப்படையான சர்வதேச ஒப்பந்தப் புள்ளி முறையில் கொள்முதல்செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
28.07.2006 அன்று சட்டப் பேரவையில் ஒரு கலர் டிவி ரூ. 2,965 என்னும் விலைக்குகலர் டிவி சப்ளை செய்ய 3 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகதெரிவிக்கப்ப்டடு இருந்தது. இந்த விலைக்கு பெறப்படும் கலர் டிவி நல்லதரமானதாக இருக்குமா என்பது சந்தேகம்.
முதல் கட்டத்தில் தேசிய ஒப்பந்தப்புள்ளி முறையில் கலர் டிவிகளை அரசு பெறும்போது அடுத்த கட்டத்தில் சர்வதேச ஒப்பந்தப்புள்ளி முறையில் கலர் டிவி கொள்முதல்செய்வதென்று மைனாரிட்டி திமுக அரசு ஏன் முடிவு எடுத்துள்ளது என புரியவில்லை.
சீனா, தைவான் போன்ற வெளிநாடுகளில் இருந்து மலிவு விலையில் கலர் டிவி வாங்கமைனாரிட்டி திமுக உத்தேசித்துள்ளது என்று தெரிகிறது. இத்தகைய டிவிகள் நல்லதரமுடையதாக ஒருக்காலும் இருக்க முடியாது.
குறைந்த பட்சம் 21 இன்ச் கலர் டிவிகளை மைனாரிட்டி திமுக அரசு வழங்கும் என்றுமக்கள் எதிர்பார்த்தார்கள். பொதுவாக கலர் டிவி குறைந்த விலையில் விற்கப்படுகின்றடிவிகள் 21 இன்ச் அளவில் தான் வருகின்றன. ஆனால் மக்களை அவ்வாறு நம்பவைத்து விட்டு. இப்போது மைனாரிட்டி திமுக அரசு 14 இன்ச் கலர் டிவிகள் தான்வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.
தரமற்ற, முத்திரை இல்லாத கலர் டிவிகளையும், மலிவான விலையில்வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும். கலர் டிவிக்களையும்வழங்குவதால் அரசாங்க நிதி, அதாவது மக்கள் வரி பணம் தான் வீணாகுமே தவிர,இதனால் பொதுமக்கள் எந்தப் பயனையும் அடையப் பேவதில்லை.
மொத்தம் எத்தனை பேருக்கு கலர் டிவிகளை இந்த அரசு வழங்கப் போகிறது என்றுகேட்டால் அதற்கு சரியான பதில் இல்லை. முதல் கட்டமாக செப்டம்பர் மாதம் 30,000கலர் டிவி வழங்கப்படும் என்கிறார்கள். அடுத்த கட்டம் எப்போது என்று கூறவில்லை.
கடந்த வாரத்தில் சட்டப் பேரவையில் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழும் மக்கள்பற்றிய கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. அப்போது மைனாரிட்டி திமுகஅரசின் அமைச்சர்கள் கடந்த அதிமுக ஆட்சி மீது சராமாரியாக புழுதிவாரிதூற்றினார்கள்.
போதாக் குறைக்கு ஆளுங்கட்சியின் கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்றஉறுப்பினர்களும் எனது தலைமையிலான கழக அரசுதான் கணக்கு எடுப்பில் தவறுசெய்து விட்டது என குற்றம் சாட்டினார்கள். வறுமை கோட்டிற்கு கீழே வாழும்மக்களின் பட்டியலை தயாரிப்பது கிராம பஞ்சாயத்து தான்.
பின்னர் கிராம சபை கூடி அந்தப் பட்டியிலுக்கு ஒப்புதல் அளிக்கிறது. வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்களின் பட்டியலை தயாரிப்பதில் அதிமுக ஆட்சியில் தவறுநடந்திருப்பதாக மைனாரிட்டி திமுக அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் உண்மைக்குபுறம்பான குற்றச்சாட்டை சுமத்துவதில் ஏதோ வஞ்சக உள் நோக்கம் இருப்பதாககருதுகிறேன்.
இந்த சாக்கில் பட்டியலை திருத்துகிறோம் என்ற போர்வையில் தங்கள்கட்சிக்காரர்களின் பெயர்களை பட்டியலில் இணைத்து விட்டு, பெரும்பாலும்திமுகவினருக்கே இலவச கலர் டிவி வழங்க திட்டம் இடுகிறார்கள் என தெரிகிறது.
நடப்பு ஆண்டில் கலர் டிவி வழங்க ரூ.750 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.உண்மையாகவே இந்த 750 கோடி ரூபாய் இதற்காக செலவு செய்யப்டுமா என்றசந்தேகம் ஒருபுறம் இருந்தாலும், வாதத்திற்காக இந்தக் கேள்வியை கேட்கிறேன்.
தோராயமாக ஒரு டிவிக்கு ரூ. 3,000 என்ற விலையில் கலர் டிவிகளை அரசுகொள்முதல் செய்தால் 750 கோடி ரூபாய் மொத்த செலவில், 25 லட்சம்குடும்பங்களுக்கு கலர் டிவி வழங்க முடியும்.
ஆனால் இந்த குடும்பங்களால் டிவி நிகழ்சிகளை எப்படி காண முடியும் கேபிள் டிவிஇணைப்புக்காக இந்த குடும்பங்கள் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கட்டணம் செலுத்தவேண்டும் என்று மைனாரிட்டி திமுக அரசு எதிர்பார்க்கிறதா அல்லது அரசே, கேபிள்டிவி இணைப்புக்கான கட்டணத்தையும் செலுத்துமா?
தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகள் பல நிதி நிலை அறிக்கையில்இடம்பெற்று விட்டதாக காட்டிக்கொள்ள மைனாரிட்டி திமுக அரசு சிரமப்பட்டுமுயன்றிருக்கிறது. ஆனால் அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பயன்கள் பெரும்பாலானமக்களை சென்று அடையாது.
மைனாரிட்டி திமுக அரசின் இந்த நிதி நிலை அறிக்கையில் ஏராளமான திட்டங்களைஅறிவித்திருக்கிறார்கள். ஆனால் அந்த திட்டங்களுக்குப் போதுமான நிதியைஒதுக்கவில்லை. எந்தத் திட்டத்தையும் முழுமையாக செயல்படுத்தத் தேவையானஅளவிற்கு நிதியை ஒதுக்கப்படவில்லை.
ஒவ்வொரு திட்டத்திலும் பன்னீர் தெளிப்பது போல் குறைந்த அளவில் நிதியைஒதுக்கி இருக்கிறார்கள். இதனால் இளைஞர்கள் என்றாலும், மகளிர் என்றாலும்பயனடைய வேண்டிய அனைவருக்கும் உதவிகள் போய்ச்சேராது.
மாறாக இந்த மைனாரிட்டி திமுக அரசு யாரை தனக்கு வேண்டியவர்கள் என்றுகருதுகிறதோ அந்தக் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் இத்திட்டத்தின் கீழ் தனக்குவிசுவாசமாக இருப்பதற்கு பரிசாக உதவிகளை வழங்க முடியும்.
மைனாரிட்டி திமுக அரசு தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையை மேலோட்டமாகபடித்தால் திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் பெரும்பாலும்நிறைவேற்றப்படுள்ளன. என்று எண்ணத்தோன்றும்.
ஆனால் உண்மை அதுவல்ல. மக்களை ஏமாற்றுவதற்காகவே பல்வேறு திட்டங்கள்அறிவிக்கப்பட்டுள்ளன. உற்றுப்பார்த்தால் இத் திட்டங்களை நிறைவேற்ற முடியாதுஎன்பது புலப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications