கோவை: வெடிகுண்டுடன் பிடிபட்ட 3 பேரிடம் ரா, ஐ.பி விசாரணை
கோவை:
கோவையில் வெடிகுண்டுகளுடன் கைதானவர்களின் 3 பேரிடம் இந்தியாவின்வெளிநாட்டு உளவுப் பிரிவான ரா மற்றும் இன்டெலிஜென்ஸ் பீரோ அதிகாரிகள் விசாரணைநடத்தி வருகின்றனர்.
கோவையில் கடந்த மாதம் 22ம் தேதி போலீசார் நடத்திய சோதனையில் ஹாரூண்பாட்ஷா (29), மாலிக் பாட்ஷா (37), போலோ சங்கர் என்கிற அத்திகூர் ரகுமான் (31),ரவி என்கிற திப்பு சுல்தான் (24), சம்சுதீன் (32) ஆகிய 5 பேர் பிடிபட்டனர்.இவர்களிடம் இருந்து வெடிபொருட்கள், வரை படங்கள் போன்றவை பறிமுதல்செய்யப்பட்டன. பல இடங்களில் இந்த கும்பல் வெடிகுண்டுகள் வைக்கதிட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில்அடைத்தனர். இவர்களை காவலில் எடுத்து போலீசார் விசாரித்தனர். இதில் ஆருண்பாட்ஷா, அத்திகூர் ரகுமான், மாலிக் பாட்ஷா ஆகியோரை மேலும் 2 நாட்கள் போலீஸ்காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்தது.
இதையடுத்து மூவரும் ரகசிய இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டு தனிப்படைபோலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு வெளி மாநில மற்றும்வெளிநாட்டு தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக தனிப்படைபோலீசார் கருதுகின்றனர்.
இதைத் தொடர்ந்து வெளிநாடுகளின் சதி குறித்து விசாரிக்கும் மத்திய உளவுப்பிரிவான ரா அமைப்பில் இருந்து ஒரு அதிகாரியும், ஐபியைச் சேர்ந்த 3 அதிகாரிகளும்கோவைக்கு வந்தனர்.
ஆருண் பாட்ஷா, அத்திகூர் ரகுமான், மாலிக் பாட்ஷா ஆகியோரிடம் இவர்களும்விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications