விமானப்படை ஊழியர் வீட்டில் ஆயுத குவியல்: துப்பாக்கிகள், குண்டுகள் சிக்கின!
கோவை:
![]() |
| நாகராஜ் |
கோவையில் விமானப்படை ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஆயுத குவியல் சிக்கியது. அந்தஊழியர் கைது செய்யப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி எட்டின்ஸ் சாலையில் உள்ள ஒரு லாட்ஜில் கள்ள துப்பாக்கிகளுடன் சிலர் தங்கிஇருப்பதாகவும் அவர்களிடம் கஞ்சா, யானை தந்தங்கள், மான் கறி இருப்பதாகவும் ஊட்டி குற்றப் புலனாய்வுபிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த லாட்ஜில் நுழைந்து ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.அவரிடமிருந்து அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இரட்டை குழல் துப்பாக்கி, தோட்டாக்கள், 2 யானை தந்தங்கள்,2 மான் கொம்புகள், 3 கிலோ மான் கறி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஊட்டியைச் சேர்ந்த தோட்ட அதிபரான ராமன் (55), சின்னபையன்(55) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் ராமன் கிருஸ்துவ மத போதகராகவும் உள்ளார்.
![]() |
| பிடிபட்ட துப்பாக்கிகள் |
அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, கோவை சூலூர் விமானப் படை மையத்தில் டிரைவராக பணியாற்றும்நாகராஜ் என்பவர் தான் துப்பாக்கியை கொடுத்ததாக கூறினர்.
இதையடுத்து நீலகிரி மாவட்ட போலீசார் கோவை போலீசாருக்கு தகவல் தந்தனர். இதையடுத்து கோவைசிஙகாநல்லூர் செல்லாண்டியம்மன் கோவில் பகுதியில் உள்ள விமானப்படை ஊழியர் நாகராஜ் (55) என்பவரின்வீட்டில் கோவை போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது இவரது வீட்டில் வன விலங்குகளை வேட்டையாட பயன்படுத்தி வந்த டபுள் பேரல் கன்,சிங்கிள் பேரல் கன், 302 ரக துப்பாக்கி, வெளிநாட்டு கைத் துப்பாக்கிகள் உள்பட 8 துப்பாக்கிகள் கிடைத்தன.
![]() |
| வெடி பொருட்கள், டெட்டோனேட்டர்கள் |
மேலும் 1,000 துப்பாக்கி குண்டுகள், பயன்படுத்தப்டட 1,000 துப்பாக்கி குண்டுகள், வெடி மருந்துக்களை நிரப்பிசுடக்கூடிய துப்பாக்கி, அதற்கு பயன்படுத்திய வெடிபொருள்கள், வன விலங்குகளை குத்திக் கொல்லும் ஈட்டி,கொடுவாள், பட்டா கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.
இருட்டில் வேட்டையாட உதவும் சர்ச் லைட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் புலி தோல், மான் தோல்,சிறுத்தைப் பல், மான் கொம்பு ஆகியவையும் அந்த வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டன.
நாகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த ஆயுதங்கள் மறைந்த அவருடைய நண்பர்சுப்பிரமணியம் கொடுத்தது என்றும், புலி, மான் தோல்கள் நரிக் குறவர்களிடம் இருந்து வாங்கியது என்றும் கதைவிட்டார்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. விமானப்படை அதிகாரிகளுக்கும் இது குறித்து தகவல்கொடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?















Click it and Unblock the Notifications