மோசடி மன்னன் மாயா வீட்டில் சோதனை
சென்னை:
ரூ.10 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள அடிதடி தாதா மாயா வெங்கடேசன் வீட்டில்போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகேயுள்ள செம்பனார் கோவில் கிரமாத்தைச்சேர்ந்தவர் மாயா. திடீரென பணக்காரரான இவர் வீரபாண்டிய கட்டபொம்மன்பேரவை என்ற பெயரில் சமூக நல உதவிகள் செய்வதாகக் கூறிக் கொண்டு, ரவுடிக்கும்பலை வைத்துக் கொண்டு பண வசூல் செய்து வந்தார்.தனது படம் கொண்ட மாபெரும் போஸ்டர்களை அவ்வப்போது ஒட்டி ஏதாவதுநிகழ்ச்சியை நடத்துவார். அரசியல்வாதிகள், போலீசாரை கையில் போட்டுக் கொண்டுஅடாவடி செய்து வந்தார். ரஜினியுடன் ஒரு சினிமாவிலும் வில்லனாக நடித்தார்.
இவர் மீது இதுவரை 13 மோசடி புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் 6புகார்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மீதி உள்ள புகார்கள் மீதுவிசாரணை நடந்து வருகிறது.
மொத்தம் ரூ.10 கோடி வரை இவர் பலரிடமும் மோசடி செய்துள்ளார். இந்தவழக்குகளை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலும் ஒரு சப்-இன்ஸ்பெக்டரை கத்தியால் குத்தியது, துப்பாக்கியைக் காட்டிமிரட்யது என தனியாக ஒரு வழக்கும் இவர் மீது உள்ளது.
மாயா வெங்கடேசன் நெல்லை சிமெண்ட்ஸ் என்ற பெயரில் சிமெண்ட் ஆலைஅமைப்பதாக கூறிதான் மோசடியில் ஈடுபட்டுள்ளார். இவர் சிமெண்ட் ஆலைகட்டுமானப் பணியில் ஒரே வேலைக்கு பலருக்கு காண்டிராக்ட் பணி கொடுத்துள்ளார்.இதில் தான் அவரது மோசடி வித்தையை காட்டியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மாயாவை 8 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து நேற்று முன்தினம் முதல் அவரிடம்மத்திய குற்றப் பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவர் தனது சிமெண்ட் ஆலையின் அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் ஜனாதிபாதிவெங்ட்ராமனை அழைத்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்ககது.
இதற்கிடையில் தாம்பரம் முடிச்சூர் ரோட்டில் உள்ள மாயா வெங்கடேசன் வீட்டிலும்சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தியுள்ளனர். மாயா வெங்கடேசன் இந்த வீட்டின்முகவரியை காட்டித்தான் அவர் துப்பாக்கி லைசென்ஸ் பெற்றார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications