மோசடி பிஷப் ஆனந்தராஜ் மீது குவியும் புகார்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீடு கட்டித் தருவதாக கூறி நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை சுருட்டிய மோசடிபிஷப் ஆனந்தராஜ் மீது இதுவரை 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. ஆனந்தராஜ் செய்த மோசடிகிட்டத்தடட ரூ. 100 கோடி அளவுக்கு இருக்கும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

சென்னை அருகே பேரூர் என்ற இடத்தில் மோலின் மிஷன் என்ற சர்ச்சையும், ஊரக வளர்ச்சி மையம் என்றபெயரில் ஒரு அமைப்பையும் நடத்தி வந்தவர் ஆனந்தராஜ். ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தைவெளிநாட்டு நிதியுதவியுடன் மேற்கொள்ளவுள்ளதாகவும், இத்திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டிக் கொடுத்தால் நல்லலாபம் கிடைக்கும் என்று கூறி நூற்றுக்கணக்கான கட்டட காண்டிராக்டர்களிடம் பலகோடி பணத்தைஏமாற்றிவிட்டதாக ஆனந்தராஜ் மீது புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து விசாரணை நடத்தி வந்த போலீஸார் பெங்களூரிலிருந்து ஆனந்தராஜ் 2 நாட்களுக்கு முன்பு இரவில்சென்னை வந்த போது மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.அவரிடம் நடத்திய முதல் கட்ட விசாரணையில் ஆனந்தராஜ் ரூ. 10 கோடி அளவுக்கு மோசடி செய்திருந்ததுதெரிய வந்தது. ஆனால் இப்போது ஆனந்தராஜ் மீது ஏராளமான பேர் புகார் கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களைச்சேர்ந்த காண்டிராக்டர்களிடம் தான் பணம் வாங்கி மோசடிசய்துள்ளார் ஆனந்தராஜ். இதுவரை கிட்டத்தட்ட 70க்கும் மேற்படட புகார்கள்போலீஸாருக்கு வந்துள்ளதாம்.ஒவ்வொரு காண்டிராக்டரிடம் ரூ. 50லட்சம், 60 லட்சம், 1கோடி என மோசடி செய்துள்ளார் ஆனந்தராஜ். அவரதுகுறைந்தபட்ச மோசடியே 30லட்சம் என்கிறார்கள்.

இதுதவிர பல்வேறு நடிகர், நடிகைகளுடனும் ஆனந்தராஜுக்குத் தொடர்பு உள்ளதாம். ஒரு மறைந்த எழுத்தாளர்மூலம் தான் நடிகைகளுடன், ஆனந்தராஜுக்கு தொடர்பு ஏற்படடதாம். இதுதவிர சில நடிகர்களுக்கு இவர் படம்எடுக்க நிதியுதவியும் செய்துள்ளாராம்.

இதற்குப் பிரதியுபகாரமாக அப்படத்தின் நாயகியை ஆனந்தராஜுக்கு அறிமுகம் செய்து வைத்துஆனந்தப்படுத்தினாராம் ஒரு நடிகர். இதுதவிர கள்ள நோட்டு அடிப்பதிலும் ஈடுபட்டுள்ளார் ஆனந்தராஜ்.ஒருமுறை சென்னை தாம்பரத்தில் கள்ள நோட்டு மாற்றும் போது ஆனந்தராஜ தனது ஆட்களுடன் சிக்கியுள்ளார்.

மதுரையிலும் ஒருவரை ஏமாற்றி ரூ.5 லடசம் வரை மோசடி செய்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதுதவிர சுனாமிநிதி மோசடி உள்ளிட்ட பல்வேறு மோசடிகளிலும் ஆனந்தராஜ் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

ஆனந்தராஜ் மீது ஏகப்பட்ட புகார்கள் வந்துள்ள போதிலும் இதுவரை 3 புகார்களின் பேரில் மட்டுமே அவரைபோலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. அவரை நாளை திருக்கழுக்குன்றம் நீதி மன்றத்தில் போலீஸார்ஆஜர்படுத்தவுள்ளனர். இதையடுத்து அவரை போலீஸ் காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

அப்போது மேலும் பலதிடுக்கிடும் தகவல்கள்வெளியாகும் என போலீஸார் எதிர்பார்க்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+