விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினால் நடவடிக்கை-கருணாநிதி
சென்னை:
விடுதலைப் புலிகள் இயக்கம் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது. எனவேஅடங்கித்தான் பேச வேண்டும். மீறினால் நடவடிக்கையை சந்தித்துதான் ஆகவேண்டும் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் இன்றுவேலூர் தொகுதி உறுப்பினர் ஞானசேகரன் பேசுகையில்,திருப்பத்தூரில் புரட்சிகர இளைஞர் முன்னணி என்ற அமைப்பின்சார்பில் தடைசெய்யப்படட விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேரணியும், ஆர்ப்பாட்டமும்நடந்ள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும். அதைச்செய்யாவிடடால் இந்தியா பிளவுபடும் என்று பேரணியில் கலந்து கொண்டவர்கள்கோஷமிட்டுள்ளனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பிரபாகரன் முதல்குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சூழ்நலையில் புலிகளுக்கு ஆதரவான இந்தப் போராட்டம்கண்டனத்துக்குரியது. இதுபோன்ற அமைப்புகளை ஆரம்பத்திலேயே தடுத்து நிறுத்தவேண்டும்.
தமிழகத்தில் தீவிரவாத செயல்கள் மீண்டும் தலைதூக்குவதை தமிழக அரசு பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது. இப்படிப்பட்ட பேரணிக்கு காவல்துறை எப்படி அனுமதிகொடுத்தது என்பதை முதல்வர் விளக்க வேண்டும் என்றார்.
அவருக்குப் பதில் அளித்த கருணாநிதி, தமிழீழ மக்களைக் கொன்று குவிக்கும் சிங்களஅரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகவும், அதற்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று அந்த அமைப்பின் வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்அனந்தகிருஷ்ணன் மாவட்ட காவல்துறையிடம் அனுமதி கோரினார்.
இதையடுத்தே அந்தப்போராட்டத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டது. ஜூலை 31ம தேதிநடந்த இந்தப் போராட்டததில் 150 பெண்கள் உள்பட 400 பேர் கலந்து கொண்டனர்.இந்தப் போராட்டத்தால் அங்கு எந்தவிதமான அசம்பாவித சூழ்நிலையும்நலவவில்லை என்று மாவட்டகாவல்துறை எனக்குத் தெரிவித்தது.
மேலும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டத்தை மிகவும் உன்னிபபாக காவல்துறைகவனித்தது.
தமிழர்கள் கொல்லப்படுவதை தாங்கிக் கொள்ளமுடியாது. எனவே அந்த போராட்டம்அனுதாபம் தெரிவிக்கும் போராட்டமே தவிர வேறு ஒன்றும் இல்லை.
இருப்பினும் இந்தியாவுக்கு எதிராக, இந்திய இறையாண்மைக்கு எதிராக யாராவதுசெயல்பட்டால் அதை தமிழக அரசு பொறுத்துக் கொள்ளாது.விடுதலைப் புலிகள் அமைப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே அடங்கித்தான் பேச வேண்டும். மீறினால்அதற்கான பலனை சந்தித்துத்தானஆக வேண்டும் என்றார் கருணாநிதி.
விரைவில் 39 மாவட்டங்கள்:
எம்.பி. தொகுதிகள் அடிப்படையில் மாவட்டங்களைப் பிரிக்கும் காலம் விரைவில்வரும் என்றும்கருணாநிதி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டம் என்றஅடிப்படையில் 39 மாவட்டங்களை உருவாக்க வேண்டும் என்று பாமக நிறுவனர்ராமதாஸ் சில நாட்களுக்கு முன் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந் நிநலையில் சட்டசபையில் இன்று கம்யூனிஸ்ட் உறுபபினர்கள் சிவபுண்ணியம்,கோவிந்தசாமி ஆகியோர் மாவட்டப் பிரிவினை குறித்து கேள்வி எழுபபினர்.
அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், நாடாளுமன்றத் தொகுதிகளின் அடிப்படையில்மாவட்டங்களை உருவாக்கும் காலம் விரைவில் வரும்.கோவையை இரண்டாகப் பிரித்து திருப்பூரைத் தலைமையிடமாகக் கொண்டமாவட்டம் அமைக்க வேண்டும் என்று கோவிந்தசாமி கோரியுள்ளார்.
பெரிய மாவட்டங்களைப் பிரிக்கும்போது திருப்பூரை தலைமையிடமாகக் கொண்டுபுதிய மாவட்டம் அமையும் என்றார் கருணாநிதி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications