ப.சி ராஜினாமா கோரி அதிமுக போர்க்கொடி-ராஜ்யசபா ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

நிதியமைச்சர் ப.சிதம்பரம் ராஜினாமா செய்யக் கோரி ராஜ்யசபாவில் அதிமுக பிரச்சனை கிளப்பியது.அதிமுகவுக்கு பாஜக, சமாஜ்வாடி, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்து கூச்சல் எழுப்பியதால்அவை ஒத்தி வைக்கப்பட்டது.

நிதியமைச்சராக இருந்து கொண்டே வேதாந்தா வீட்டு வசதி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக ப.சிதம்பரம்இருப்பதாகவும் அதிமுக எம்பிக்கள் குற்றம் சாட்டினர்.

லண்டனைச் சேர்ந்த அனில் அகர்வால் என்பவருக்குச் சொந்தமானது வேதாந்தா ரிசோர்சர்ஸ் நிறுவனம். இந்நிலையில் வேதாந்தாவின் பில்லியன்கள் என்ற பெயரில் ஒரு புத்தகம் வெளியாகியுள்ளது.

அதில் சிதம்பரமும் அந்த நிறுவனத்தின் போர்ட் ஆப் டைரக்டர்களில் ஒருவராக இருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால், இதை சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்துள்ளார். எப்போது அமைச்சராக பதவியேற்றேனோ அப்பேதேவேதாந்தா ரிசோர்சஸ் நிறுவனத்தின் இயக்குனர்கள் பதவியில் இருந்து தான் விலகி விட்டதாக சிதம்பரம்விளக்கம் அளித்துள்ளார்.

ஆனாலும் அதிமுக இன்று இந்தப் பிரச்சனையை மக்களவையில் கிளப்பியது. அவை கூடியதும், எழுந்த அதிமுகஎம்பிக்கள், சிதம்பரமே ராஜினாமா செய், சிதம்பரமே ராஜினாமா செய் என கோஷம் எழுப்பினர்.

அவர்களுக்கு பாஜக தலைவர்களான சுஷ்மா சுவராஜ், யஷ்வந்த் சின்ஹா ஆகியோர் ஆதரவு தெரிவித்தனர்.நிதியமைச்சர் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாக பாஜகவும் அதிமுகவும் குற்றம் சாட்டின.

மேலும் சமாஜ்வாடி கட்சியும் தெலுங்கு தேசமும் அவர்களுக்கு ஆதரவாக குரல் தந்ததால் அவையை நடத்திதமுடியவில்லை. அதிமுக எம்பிக்கள் அவையின் மையப் பகுதியில் கூடி சிதம்பரத்துக்கு எதிராக குரல் எழுப்பினர்.

சிதம்பரத்துக்கு ஆதரவாக காங்கிரஸ் எம்பிக்களும் திமுக எம்பிக்களும் குரல் தந்ததால் பெரும் கூச்சல் குழப்பம்நிலவியது. அப்போது சிதம்பரமும் அவையில் இருந்தார்.

கூச்சல் அதிகமாகவே அவை ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+