சிறுபான்மையினருக்கு யார் ஆதரவு: சட்டசபையில் திமுக-அதிமுக மோதல்
சென்னை:
சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் திமுக, அதிமுகஉறுப்பினர்களுக்கு இடையே சட்டசபையில் கடும் வாக் குவாதம் நடந்தது. இதைதொடர்ந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் மிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்நலத்துறை மீதான மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடந்தது.அதன் விவரம்:
செ.ம.வேலுச்சாமி (அதிமுக): இன்று தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீடுசெயல்படுத்தப்படுகிறது. மத்திய அரசில் அங்கம் வகிக்கிகும் திமுக, உயர் கல்விநிலையங்கள், பல்கலைக்கழகங்களில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாகஉயர்த்த சட்டம் கொண்டு வருவதற்கு எந்த முயற்சி எடுத்து இருக்கிறீர்கள்?
மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களுக்கு ஏற்ப இட ஒதுக்கீடு செய்யலாம் என்றுஅம்மா (ஜெயலலிதா) கொண்டு வந்து நிறைவேற்றிய சட்டத்தை மத்திய அரசுநிறைவேற்றுவதற்கு, அதில் அங்கம் வகிக்கும் கட்சிகள் நடவடிக்கை எடுக்கவில்லை?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: 69 சதவீத ஒதுக்கீட்டை நாம் அனுபவிப்பதாக் கூறுவதுதவறு. நீங்கள் அதற்கான சட்டம் கொண்டு வந்தீர்கள். ஆனால் அது சம்பந்தமாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு வந்தபோது சில விவரங்களை அதிமுக அரசின் வக்கீல்சொல்லவில்லை.
50 சதவீத இட ஒதுக்கீடு தான் தர முடியம். அதை ஒப்புக் கொள்ளுகிறீர்களா?இல்லையா? என்று கேட்ட போது, 50 சதவீத இட ஒதுக்கீட்டடை தமிழகத்தில்அமல்படுத்துகிறோம் என்று ஒத்துக் கொண்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தவர்கள்நீங்கள். இது தான் உங்கள் சாதனை.
நீங்கள் செய்த தவறு காரணமாக 50 சதவீத இட ஒதுக்கீட்டை ஏற்றுக் கொண்டு மேலும்ஒரு 19 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு மாற்று ஏற்பாடுகளை நாங்கள் செய்து கொண்டுஇருக்கிறோம். ஆனால் நிரந்தரமாக 69 சதவீதம் உட ஒதுக்கீடு பெறுவதற்கு மத்தியஅரசை கருணாநிதி வற்புறுத்திக் கொண்டு இருக்கிறார்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): தமிழக்ததை சார்ந்த கிறிஸ்தவ பேராயர்கள்அத்தனை பேரும் கருணாநிதியைச் சந்தித்து, இனிமேல் சிறுபான்மை சமுதாயத்துக்குஎன்று கோரிக்கை வைப்பதற்கு எங்களிடம் ஒன்றுமில்லை. அந்த அளவுக்கு நாங்கள்பாதுகாப்பை உணர்கிறோம்.
கடந்த 5 ஆண்டுகளாக இல்லாத பாதுகாப்பு இப்போதுதான் கிடைக்கிறது என்றுகூறினார்கள். எனவே சிறுபான்மையினர் மீது அதிமுகவினர் காட்டும் ஆதரவுபோலியானது என்பதை இங்கே பதிவு செய்கிறேன்.
பதர் சயீத் (அதிமுக): என்எல்சி பிரச்சனையில் ஆதரவு வாபஸ் என மிரட்டியகருணாநிதி, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு பிரச்சனைக்கும் மத்திய அரசைமிரட்டுவாரா?
அமைச்சர் பொன்முடி: இஸ்லாமியர்களுக்கு அதிமுக ஆட்சியில் அமைச்சரவையில் இடம் கொடுக்காமல் அங்கும்இங்குமாக அலை கழித்தனர். இந்த ஆட்சியில் 2 இஸ்லாமியர்களுக்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்பட்டுஇருக்கிறது.
பதர் சயீத்: கடந்த ஆட்சியில் அன்வர் ராஜாவுக்கு அமைச்சர் பதவி அளிக்கப்பட்டு இருந்தது.சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு அளிக்க முடியாது என்பதை மத்திய அரசு திட்டமும் தெளிவாககூறிவிட்டது. அவர்கள் கருத்து அப்படி இருக்கும் போது, தமிழகத்தில் நீங்கள் எப்படி இட ஒதுக்கீடு கொண்டு வரமுடியும்? எனவே நீங்கள் மத்திய அரசுக்கு தரும் ஆதரவை திரும்ப பெறுவீர்களா?
அப்துல் காசிம் (திமுக): அப்படி ஒரு சட்டம் இயற்ற முடியாது என்று பதர் சயீத் கூறினார். ஆனால் திமுகமாநாட்டில் சோனியா கலந்து கொண்டு, சிறுபான்மையினருக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கு இசைவுதெரிவித்துள்ளதை சுட்டிக் காட்டுகிறேன். இஸ்லாமியர்களின் குரல் வளையை நெரித்தது அதிமுக ஆட்சி.உங்களுக்கும் (பதர் சயீத்) இஸ்லாமியர் என்ற காரணத்துக்காக எம்எல்ஏ சீட் தரவில்லை. அவரது சக பள்ளித்தோழி என்பதற்காகத்தான் சீட் தந்திருக்கிறார்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: பாபர் மசூதி இடக்கப்பட்டபோது கரசேவைக்கு ஆதரவு தெரிவித்தவர் யார்என்பதை பதர் சயீத் சொல்வாரா?.
இவ்வாறு விவாதம் நடந்து கொண்டிருந்தபோது அதிமுகவினர் மொத்தமாக எழுந்து நின்று தங்களுக்கு வாய்ப்புகொடுக்கும்படி கேட்டனர். ஆனால் வாய்ப்பு தரப்படவில்லை.
இதைத் தொடர்ந்து அதிமுகவினர் அனைவரும் காரணத்தைக் கூறாமலே வெளிநடப்பு செய்தனர். அவைலாபியில் இருந்து சபாநாயகருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள். அவர்கள் அனைவரையும்வெளியேற்றும் படி சபாநாயகர் உத்தரவிட்டார். அதை தொடர்ந்து அனைவரும் வெளியே சென்றனர்.












Click it and Unblock the Notifications