ஜாமீன்: வேறு நீதிபதி விசாரிக்க கோரும் ஜனனி
மதுரை:
கள்ள நோட்டு வழக்கில், தான் தாக்கல் செய்துள்ள முன் ஜாமீன் மனுவை நீதிபதிசம்பத்குமாருக்கு பதில் வேறு நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று கோரி ஜனனி மதுரைஉயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடராஜனின் தோழியான ஜனனி மீது வருமான வரித்துறை தந்த புகாரையடுத்துமதுரை போலீஸார் கள்ள நோட்டு வழக்குப் பதிவு செய்துள்ளனர்.இதையடுத்து ஜனனி முன் ஜாமீன் கோரி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை நீதிபதி சம்பத்குமார் விசாரித்து வருகிறார்.
இந் நிலையில் நீதிபதி சம்பத் குமார் தனது மனுவை விசாரிக்கக் கூடாது என்று கூறிஜனனியின் சார்பில் உயர்நீதிமன்றக் கிளையிலேயே இன்னொரு மனு தாக்கல்செய்யபபட்டுள்ளது.
அந்த மனுவில், கடந்த 2003ம் ஆண்டு கஞ்சா வழக்கில் நான் கைதுசெய்யப்பட்டபோது, போதைப்பொருள் தடுப்பு நீதிமன்ற நீதிபதியாக சம்பத்குமார்இருந்தார். அப்போது இந்த வழக்கு தொடர்பாக சில உத்தரவுகளை அவர்பிறப்பித்தார்.
எனவே என் முன் ஜாமீன் மனுவை அவர் விசாரித்தால் நியாயம் கிடைக்காது. எனவேவேறு நீதிபதியிடம இந்த மனுவை அனுப்ப வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஜனனியிடமிருந்து கைபபற்றப்பட்ட ரூ.1.40 கோடி பணம் மதுரைபோதைப் பொருள் தடுப்பு நீதிபதி மாணிக்கம் முன்னிலையில் எண்ணப்பட்டுமொத்தப் பணமும் அரசுக் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இப்பணத்தை தங்களிடம் ஒப்படைக்க சிபிசிஐடி போலீஸாரும், வருமானவரித்துறையினரும் கோரி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications