பாக் வெளியேற்றிய இந்திய தூதரக அதிகாரி நாடு திரும்பினார்
Subscribe to Oneindia Tamil
வாகா:
பாகிஸ்தான் அரசால் வெளியேற்றப்பட்ட இந்திய தூதரக அதிகாரி தீபக் கெளல் வாகாஎல்லை வழியாக இந்தியாவுக்குத் திரும்பினார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் விசா வழங்கும் பிரிவில் பணியாற்றிவந்த தீபக் கெளல் உளவு பார்த்ததாகவும், தூதரக அதிகாரி என்ற அந்தஸ்துக்குப்பொருத்தமானதாக அவரது செயல்கள் இல்லை என்றும் கூறி அவரை 48 மணிநேரத்தில நாட்டை விட்டு வெளியேற பாகிஸ்தான் உத்தரவிட்டது.இதற்குப் பதிலடியாக பாகிஸ்தான் தூதரக அதிகாரி ஒருவரை இந்தியாவெளியேற்றியுள்ளது. இந் நிலையில் பாகிஸ்தானிலிருந்து சாலை மார்க்கமாக வாகாஎல்லை வழியே தீபக் கெளல் இந்தியா திரும்பினார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நான் அங்கு மிக மோசமாகநடத்தப்பட்டேன். எந்த ரகசிய ஆவணத்தையும் நான் யாரிடமும் தரவில்லை.
குடும்ப உறுப்பினர்களை அழைத்துச் செல்வதற்காக வாகா எல்லைக்கு வந்த என்னைபாகிஸ்தான் அதிகாரிகள், கையைக் கட்டி, ரகசிய இடத்திற்குச் சென்று கிட்டத்தட்ட 5மணி நேரம் விசாரணை நடத்தினர் என்றார் கெளல்.












Click it and Unblock the Notifications