பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
குடும்பத் தகராறில் பெண் போலீஸ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
![]() |
சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்தவர்தனலட்சுமி (28). இவரது கணவர் கோபால கண்ணன் (35). இவர் சேலம்அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் போலீசாக வேலை பார்த்து வருகிறார்.
இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஸ்ரீநிதி (7),சுதர்சன் (6) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.
ஆனால் சமீபகாலமாக இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது.
இந் நிலையில் தனலட்சுமி நள்ளிரவில் வீட்டு மின் விசிறியில் தூக்கு போட்டுதற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து போலீஸ் குடியிருப்பில் இருந்தவர்கள் அன்னதானப்பட்டி போலீசுக்குதகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து வந்துதனலட்சுமியின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.
தனலட்சுமியின் கணவரான போலீஸ்காரர் கோபாலகண்ணனிடம் விசாரணை நடந்துவருகிறது.













Click it and Unblock the Notifications