கடலில் பாய்ந்த தண்ணீர் லாரி-கிளீனர் கதி என்ன?
சென்னை:
சென்னை துறைமுகத்தில, சரக்கு லாரி தறி கெட்டு ஓடி கடலில் விழுந்தது. லாரியைகிட்டத்தட்ட 12 மணி நேரம் போராடி கடலிலிருந்து எடுத்தனர். ஆனால், அதைஓட்டிய கிளீனர் என்ன ஆனார் என்று தெரியவில்லை.
சென்னை துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து வரும் நிலக்கரி மலை போலகுவித்து வைக்கப்பட்டிருக்கும்.அதிலிருந்து தூசி கிளம்பாமல் இருக்க கடல் நீரை நிலக்கரி மீது தெளிப்பார்கள். இந்தப்பணியைச் செய்ய ராயபுரத்தைச் சேர்ந்த ஒரு நிறுவனம் காண்டிராக்ட் எடுத்திருந்தது.
ஏராளமான லாரிகள் மூலம் கடல் நீர் கொண்டு வரப்பட்டு நிலக்கரி மீதுதெளிக்கப்பட்டு வருகிறது.
கடல் நீரை நிரப்புவதற்காக ஏராளமான லாரிகள் வரிசையில் நின்று கொண்டிருந்தன.அப்போது ஒரு லாரியின் டிரைவரான பாபு வெளியில் போய்விட்டதால் லாரியைஅதன் கிளீனர் ஓட்டி வந்தார்.
தண்ணீர் நிப்பபும் இடத்திற்கு அருகே வந்த லாரியை அவரால் நிறுத்த முடியவில்லை.அது தாறுமாறாக ஓடி கடலில் விழுந்தது.
இதையடுத்து துறைமுகம் போலீஸாரும் தீயணைப்புப் படையினரும் விரைந்து வந்துகிரேன் மூலம் லாரியை 12 மணி நேர போராட்டத்திற்குப் பின் மீட்டனர்.
லாரியின் கிளீனரின் உடல் ஏதும் இல்லை. அவர் கடலில் மூழ்கிவிட்டாரா அல்லதுநீந்தி தப்பிவிட்டாரா என்று தெரியவில்லை.


Click it and Unblock the Notifications
