இன்றும் சட்டசபையில் அதிமுக வெளிநடப்பு
சென்னை:
சட்டசபையில் உரிமை மீறல் பிரச்சனைக்கு மறுப்பு தெரிவித்ததால் அதிமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் அதிமுக எல்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம் எழுந்து உரிமை மீறம்பிரச்சனை ஒன்று குறித்து பேச அனுமதி கேட்டார். அதன் விவரம்:பன்னீர்செல்வம்: நேற்று சட்டசபையில் வருவாய்த்துறை அமைச்சர் எதிக்கட்சி தலைவரின் (ஜெயலலிதா)உரிமையையும், அவையின் உரிமையையும் மீறும் வகையில் அவைக்கு சம்பந்தமில்லாத ஒரு கருத்தை (சுதாகரன்கல்யாண செலவு) தெரிவித்தார். அவர் அமைச்சர் பதவி ஏற்றபோது ஒரு சார்பு இல்லாமலும் விறுப்பு, வெறுப்புஇல்லாமல் நடந்து கொள்வேன் என்று உறுதி மொழி ஏற்று இருக்கிறார்.
ஆனால் சிக்கன நடவடிக்கை பற்றி நான் பேசியபோது அரசுக்கு சம்பந்தம் இல்லாமல் எங்கள் அம்மா பற்றி பேசிஇருக்கிறார். அது பற்றி உரிமை மீறல் பிரச்சனையை எழுப்ப எனக்கு அனுமதி வழங்குபடி கேட்டுக் கொள்கிறேன்.
செங்கோட்டையன் (அதிமுக): அதே போல சட்டமன்ற விதிப்படி ஒரு ஒழுங்கு பிரச்சனை குறித்து பேச அனுமதிவழங்குபடி கேட்டுக் கொள்கிறேன். வருவாய்துறை அமைச்சர் ஒரு தனிப்பட்ட பிரச்சனை பற்றி பேசியது அவைகுறிப்பில் இடம் பெற்றுள்ளது. அதை நீக்க வலியுறுத்துகிறேன். அது பற்றி பேச அனுமதி வழங்க வேண்டும்.
அமைச்சர் பரிதி இளம்வழுதி: ஒழுங்கு பிரச்சனை என்பது சபையில் விவாதம் நடக்கும் போது அது திசை திரும்பிசென்றால் சுட்டி காட்டி பேசுவதாகும். அது எழுதி கொடுத்து கேட்பது அல்ல. (இதையடுத்து செங்கோட்டையன்,அமைச்சரை பற்றி ஒரு வார்த்தையை குறிப்பிட்டார். அதை அவை குறிப்பில் இருந்து நீக்குவதாக சபாநாயகர்அறிவித்தார்)
அமைச்சர் அன்பழகன்: உரிமை மீறில் பிரச்சனை பற்றி சபாநாயகர்தான் முதலில் தீர்ப்பை வழங்க வேண்டும்.அவர் உரிமை மீறல் பிரச்சனையை எடுத்துக் கொள்ள அனுமதித்தால் அனைவரும் அது குறித்து பேசலாம்.முதலில் அவை தலைவர் தீர்ப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
சபாநாயகர்: சட்டமன்ற விதி 220 படி ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார் ஆகியோர்வருவாய்துறை அமைச்சர் பேசியது குறித்து ஒரு உரிமை பிரச்சனை கிளப்பி இருக்கிறார்கள். இதில் ஜெயக்குமார்இன்று அவைக்கு வரவில்லை. அவையில் எந்தெந்த வார்த்தைகள் பேசப்படலாம், எவை நீக்கப்படலாம் என்பதுகுறித்து விதி இருக்கிறது.
அமைச்சர் பேசியதில் இடம் பெற்ற வார்த்தைகள் எதுவும் அவை மரபை மீறியதாக இல்லை. எனவே இதில்உரிமை மீறல் இல்லை. ஆகவே விவாதத்திற்கு அனுமதி இல்லை என்றார்.
இதற்கு அதிமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வெளிநடப்பு செய்வதாக கூறிசபாநாயகருக்கு எதிராக கோஷம் எழுப்பியபடி வெளியேறினர்.
பின்னர் அமைச்சர் ஆற்காடு வீராசாமி பேசியதாவது,
சபாநாயகர் ஒரு பிரச்சனை குறித்து தீர்ப்பு வழங்கிய பிறகு அவையில் உட்காருவதோ, வெளிநடப்பு செய்வதோஉறுப்பினர்கள் விருப்பம். திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் ஹரி சபாநாயகர் ஒழிக என்று கோஷம் எழுப்பிசென்றார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே இந்த பிரச்சனையை உரிமை மீறல்குழுவுக்கு அனுப்ப கோட்டுக்கொள்கிறோன் என்றார்.
சபாநாயகர்: உரிமை மீறல் குழுவுக்கு இதை அனுப்புகிறேன் என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications