சொத்துக் குவிப்பு-நோட்டீஸ் பெற சசி மறுப்பு:பத்திரிக்கைகளில் வெளியிட திமுக கோரிக்கை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸைப்பெற சசிகலா மறுப்பதால் அந்த நோட்டீஸை பத்திரிகைகளில் விளம்பரமாகவெளியிட அனுமதிக்க வேண்டம் என்று கோரி திமுக பொதுச் செயலாளர் அன்பழகன்உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

வருமானத்திற்குஅதிகமாக ரூ. 66 கோடி அளவுக்கு சொத்து சேர்த்த முன்னாள்முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி, தினகரன்ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புப் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெங்களூரி தனி நீதிமன்றதில்விசாரணையில் உள்ளது.

இந் நிலையில் ஜெயலலிதாவின் கோரிக்கைப்படி இந்த சொத்துக் குவிப்புவழக்கையும், லண்டனில் சசிகலா குடும்பத்தினர் ஹோட்டல் வழக்கையும் சேர்த்துவிசாரிக்க பெங்களூர் தனி நீதிமன்றம் முடிவு செய்தது. இதை எதிர்த்து அன்பழகன்உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் நீதிமன்றத்தில் விசாரணை பெருமளவுமுடிந்து விட்ட நிலையில், விசாரணையை இழுத்தடித்து தீர்ப்பை தள்ளிப்போடுவதற்காகத் தான் இரு வழக்குகளையும் ஒன்றாக சேர்த்து விசாரிக்ககோரியுள்ளது ஜெயலலிதா தரப்பு என திமுக அன்பழகன் தனது மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும் வழக்குகளை சேர்த்து விசாரிக்கக் கூடாது என்றும் அன்பழகன்கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பெங்களூர் விசாரணைக்கு இடைக்காலத்தடை விதித்து. அன்பழகன் மனுவுக்குப் பதில் அளிக்குமாறு ஜெயலலிதா, சசிகலாஉள்ளிட்ட ஐந்து பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

இந்த நோட்டீஸை சசிகலா தவிர மற்ற நான்கு பேரும் பெற்றுக் கொண்டு விட்டனர்.சசிகலா மட்டும் நோட்டீஸை வாங்காமல் உளளார். வழக்கை இழுத்தடிக்கும்நோக்கத்தில் தான் சசிகலா இதைச் செய்வதாக திமுக கூறுகிறது.

இந் நிலையில், அன்பழகன் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிதாக ஒரு மனு தாக்கல்செய்யப்பட்டுள்ளது.

அதில், உச்ச நீதிமன்றம் தபால் மூலம் அனுப்பி நோட்டீஸை சசிகலாவைத் தவிர மற்றநான்கு பேரும் பெற்றுக் கொண்டனர்.அதைப் பெற சசிகலா மறுத்து விடடார்.

இதையடுத்து கடந்த ஜனவரி 6ம் தேதி வக்கீல் ஒருவர் சசிகலா வீடடுக்குச் சென்றுநோட்டீஸை கொடுக்கமுயன்றார். ஆனால் வீட்டுப் பாதுகாவலர்கள் வக்கீலை உள்ளேஅனுமதிக்க மறுத்துவிட்டனர்.

தொடர்ந்து பிப்ரவரி 28, மார்ச் 10, 15 ஆகிய தேதிகளிலும் கொடுக்கமுயன்றும்தோல்விதான் கிடைத்தது. சசிகலா நோட்டீஸை பெற முன் வராததால், அந்தநோட்டீஸில் உள்ள விவரங்களை பத்திரிக்கைகளில் விளம்பரமாக வெளியிடஅனுமதிக்க வேண்டும் என்று மனுவில் அன்பழகன் கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+