சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நிலம்- அதிமுக அரசு உத்தரவை ரத்து செய்தது திமுக அரசு
சென்னை:
ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு நிலம்வழங்கப்பட்டது தொடர்பான அரசு ஆணையை, திமுக அரசு ரத்து செய்துள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழக அரசு நிறுவனமான தமிழ்நாடு மின்னணுகழகத்திற்குச் சொந்தமான 123 ஏக்கர் நிலத்தை ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்குதமிழக அரசு வழங்கியது.இது பெரும் சர்ச்சயைை எழுப்பியது. இந்த நிலம் வழங்கியதில்பல்வேறுமுறைகேடுகள் நடந்திருப்பதாக திமுக அப்போதே குற்றம் சாட்டியது.இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்திலும்திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.
இந் நிலையில் சமீபத்தில் முதல்வர் கருணாநிதி தலைமையில் நடந்த அமைச்சரவைக்கூட்டத்தில் ஐந்து சாப்ட்வேர் நிறுவனங்களுக்கும் நிலம வழங்கப்பட்டதை ரத்துசெய்யவும், மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தவும்முடிவுசெய்யப்பட்டுள்ளது.
காக்னிஸன்ட் டெக்னாலஜிஸ் லிமிட்டெட் (20 ஏக்கர்), மெகாசாப்ட் (25 ஏக்கர்),பென்ச்மார்க் சாப்ட்டெக் (25 ஏக்கர்), புரோட்டான் வெப் (3 ஏக்கர்), அட்வான்ஸ்சாப்ட்வேர்(50 ஏக்கர்) ஆகிய நிறுவனங்களுக்கு ஒரு ஏக்கர் நிலம் ரூ. 48 லட்சம் என்றவீதத்தில் அதிமுக ஆட்சியில் விற்கப்பட்டது.
கடந்த மார்ச் 1ம்தேதி இதுதொடர்பாக ஆணை பிறப்பித்தார் ஜெயலலிதா.
ஆனால் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் இந்த அரசு ஆணை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது திமுக அரசு இந்த ஆணையை ரத்து செய்து விட்டது.
சாப்ட்வேர் நிறுவனங்களுக்கு தரப்பட்ட நிலத்தின் உண்மையான மதிப்பு ஒரு ஏக்கர்ரூ. 3 முதல் 4 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் வெறும் 48லட்சம் ரூபாய்க்குஇந்த நிலத்தை தர ஒப்புக்கொண்டதன் பின்னணியில் பெரும் ஊழல் நடந்திருப்பதாகதிமுக குற்றம் சாட்டி வருகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications