முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தம்பி தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் தம்பி ராஜ்குமார் தற்கொலை செய்துகொண்டார்.
அதிமுக ஆட்சியில் சட்டத்துறை உள்ளிட்டமுக்கியப் பொறுப்புகளை வகித்தவர்ஜெயக்குமார். சட்டசபை அதிமுக பொருளாளராக உள்ளார். இவரது தம்பி ராஜ்குமார்.மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வந்தர். தண்டையார் பேட்டையில் வசித்துவந்தார்.இந் நிலையில் நேற்று தனது மாலை வீட்டில் தூக்குப் போட்டுக்கொண்டு தற்கொலைசெய்து கொண்டார். ராஜ்குமாருக்கு சரோஜினி என்ற மனைவியும், 2 பெண்குழந்தைகளும் உள்ளனர்.
ராஜ்குமார் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா இரங்கல்தெரிவித்துள்ளார்.
இவரது தற்கொலைக்கு வழக்கமாகக் கூறப்படும் தீராத வயிற்று வலியே காரணமாகக்கூறப்படுகிறது. ஆனால், பின்னணியில் வேறு ஏதாவது காரணம் இருக்கலாம் என்றுதெரிகிறது.












Click it and Unblock the Notifications