ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும்: மதுரை ஆதீனம்
காஞ்சிபுரம்:
சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று மதுரை ஆதீனம் கோரிக்கைவிடுத்துள்ளார்.
காஞ்சிபுரம் வந்த மதுரை ஆதீனம் செய்தியாளர்களிடம் பேசுகையில், வயது வித்தியாசமின்றி அனைத்துபெண்களையும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனுமதிக்க வேண்டும். கடவுளுக்கு முன் அனைவரும் சமம்.எனவே சபரிமலை கோவிலில் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும்.சபரிமலை தந்திரியை அப்பதவியிலிருந்து நீக்கியது துரதிர்ஷ்ட வசமானது. அதேசமயம் தந்திரி தொடர்பாகவெளியாகும் செய்திகளும் வருத்தம் தருகிறது.
பணம் கொடுத்து கடவுளை தரிசிக்கும் முறை மிகவும் தவறானது. கடவுளுக்கு முன்பு அனைவரும் ஒன்றுதான்.எனவே இந்த முறையை ரத்து செய்ய வேண்டும். அனைவரும் ஒரே மாதிரி கடவுளை தரிசிக்க வழி செய்யவேண்டும்.
மதமாற்றததைத் தடுக்க சட்டம் கொண்டு வருவது தான் ஒரே வழி. திருப்பதி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்ஒருவர் மதமாற்ற பிரசாரங்களை மேற்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து விசாரிக்கவேண்டும். கல்வி நிறுவனங்கள் மதமாற்ற களங்களாக மாறுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.
சிதம்பரம் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதி மறுக்கப்படுவது வேதனையை அளிக்கிறது.அனைத்து சாதியினரும் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாட அனுமதிக்க வேண்டும் என்றார்ஆதீனம்.
இதைத்தொடர்ந்து சங்கரமடத்திற்கும் ஆதீனம் சென்றார். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆதீனம்சங்கர மடத்திற்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கது. ஜெயேந்திரரை ஆதீனம் சந்தித்துப் பேசினார். பின்னர்ஜெயேந்திரரின் 72வது பிறந்த நாள்விழாவிலும் ஆதீனம் கலந்து கொண்டார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications