மைனர் பெண்ணைக் கடத்திக் கல்யாணம்: பைனான்சியருக்கு முன்ஜாமீன் மறுப்பு
சென்னை:
16 வயது மைனர் பெண்ணான கரோலினைக் கடத்திச் சென்று, கற்பழித்து, பின்னர்வலுக்கட்டாயமாக கல்யாணம் செய்தாதக குற்றம் சாட்டப்பட்டுள்ள பைனான்சியர்கோவி. கண்ணனுக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னையைச் சேர்ந்த திரைப்பட பைனான்சியர் கோவி.கண்ணன், 16 வயதுபெண்ணான கரோலினை கடத்திச் சென்று, மதுரை மாவட்டம் ஆண்டிப்பட்ட அருகேவீட்டில் அடைத்து வைத்து பலமுறை கற்பழித்து பின்னர் கட்டாயக் கல்யாணம் செய்துகொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.அவருடைய செயல்களுக்கு துணை போனதாக நான்கு போலீஸார் ஏற்கனவேசஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். கோவி.கண்ணன் தலைமறைவாகி விட்டார். இந்தநிலையில், முன்ஜாமீன் கோரி அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்செய்திருந்தார்.
அந்த மனு நேற்று நீதிபதி பாட்ஷா முன்னிலையில், விசாரணைக்கு வந்தது. அப்போதுகரோலினுக்கு ஆதரவாக அகில இந்திய முற்போக்கு பெண்கள் இயக்கம் சார்பில்வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகியிருந்தார்.
அரசுத்தரப்பு, கரோலின் தரப்பு, பெண்கள் இயக்கம் மற்றும் கோவி. கண்ணன் தரப்புவக்கீல்களின் வாதத்தை நீதபதி கேட்டார். கோவி.கண்ணன், கரோலினை மணந்தபோது எடுத்த புகைப்பட ஆல்பமும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
அந்தப் புகைப்படங்களைப் பார்த்த நீதிபதி, பெண்ணின் முகத்தில் திருமணக் களையேஇல்லையே, ஒரு விரக்திதான் அத்தனை படங்களிலும் தெரிகிறது என்றார்.
பின்னர் இந்த வழக்கில்போலீஸ் அதிகாரிகள் பலர் சம்பந்தப்பட்டுள்ளனர். இவர்கள்தற்காலிக பணிநீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாகவும் உள்ளனர்.மனுதாரர் மீது மிகக் கடுமையான குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
16 வயதுப் பெணணை 42 வயதுக்காரர் கடடாயத் திருமணம் செய்தார் என்பதுகடுமையான குற்றச்சாட்டு. மனுதாரரும் தலைமறைவாக உள்ளார்.
விசாரணை முக்கிய கட்டத்தில் உள்ளது. இன்னும் முழுமை பெறவில்லை. எனவேமனுதாரரை போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க வேண்டியது அவசியமாகிறது.உண்மையான குற்றவாளியைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளதால் மனுதாரரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications