இலங்கை இந்து தமிழர்களைத் தாக்கும் கியாத்துப் படை
ராமநாதபுரம்:
இலங்கையில் இந்து தமிழர்களைத் தாக்க கியாத்துப் படை என்ற பெயரில் முஸ்லீம்தமிழ் இளைஞர்களைக் கொண்ட புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாகஇலங்கையிலிருந்து தப்பி வந்துள்ள அகதிகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் சண்டை மீண்டும் வலுத்து வருவதால், அங்கிருந்து அகதிகளாகதமிழகம் வரும் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.வியாழக்கிழமை 206 அகதிகள் ராமேஸ்வரம் வந்து சேர்ந்தனர்.இலங்கையிலிருந்து தப்பி வரும் அகதிகள் அங்கு நடக்கும் கொடுமைகளை கண்ணீர்மல்க தெரிவிக்கின்றனர். பரந்தாமன் என்ற அகதி கூறுகையில், இலங்கையில்இப்போது தமிழர்களிடையே கூட பிளவு ஏற்பட்டு விட்டது.
இந்து மதத்தைச் சேர்ந்த தமிழர்களை தாக்க தமிழ் முஸ்லீம் இளைஞர்களைக் கொண்டகியாத்துப் படை என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டுதிரிகோணமலையில் ஒருசிலை நிறுவுவதில் ஏற்பட்ட பிரச்சினையைத் தொடர்ந்துகியாத்துப் படை தொடங்கப்பட்டது.
சமீபத்தில் மூதூர்-திரிகோணமலை இடையே சென்ற ஒரு பேருந்தை நிறுத்தி நான்குஇந்து தமிழர்களை கியாத்துப் படையினர் சுட்டுக்கொன்றனர். அப்போது நான்அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன்.
இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களை திரிகோணமலை அரசு மருத்துவமனைக்குக்கொண்டு சென்றபோது அவர்களை உள்ளே அனுமதிக்க அங்கிருந்த சிங்களபோலீஸார் மறுத்து விட்டனர்.
இதேபோல மூதூரில் புதுமணத் தம்பதியையும் கியாத்துப் படையினர் சில நாட்களுக்குமுன்பு சுட்டுக் கொன்றனர். கியாத்துப் படையினர் குறி வைத்துத் தாக்கத்தொடங்கியுள்ளதால் இந்துத் தமிழர்கள் வேலைகளுக்குப் போவதற்கு அஞ்சும் நிலைஏற்பட்டுள்ளது.
முதலில் சிங்கள ராணுவத்தைப் பார்த்து அஞ்சினோம், இப்போது தமிழ் முஸ்லீம்களின்கியாத்துப் படையும் எங்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது என்றார்பரந்தாமன்.
கியாத்துப் படையினருக்கு இலங்கை அரசு பெரும் ஊக்குவிப்பை அளித்து வருவதாகசசிக்குமார் என்ற தமிழர் தெரிவித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications