சென்னை பல்கலை 150வது ஆண்டு விழா
சென்னை:
சென்னை பல்கலைக் கழகத்தின் 150வது ஆண்டு விழா செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகியதேதிகளில் நடைபெறுகிறது. இதில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கலந்துகொள்கிறார்.
சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் தியாகராஜன் இதுகுறித்துசெய்தியாளர்களிடம் கூறுகையில், கடந்த 1857ம் ஆண்டு செப்டம்பர் 5ம் தேதிசென்னை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது. நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள்,அறிஞர்கள், அரசியல் மேதைகள், குடியரசுத் தலைவர்கள், ஆளுநர்கள், தொழில்துறைநிபுணர்கள் என பல தரப்பட்டவர்களை உருவாக்கியுள்ளது.இப்படிப் பட்ட பெருமை கொண்ட சென்னை பல்கலைக் கழகம் வருகிற 5ம்தேதியுடன் 150வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இதை கோலாகலமாககொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வருகிற 4ம் தேதி 150வது ஆண்டு விழா தொடங்குகிறது. தமிழக ஆளுநர் பர்னாலாதலைமை தாங்குகிறார். குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராகபங்கேற்கிறார். முதல்வர் கருணாநிதி, மத்திய, மாநில அமைச்சர்கள்பங்கேற்கவுள்ளனர்.
ரூ. 6 கோடி செலவில் புனரமைக்கப்பட்டுள்ள செனட் இல்லம் நிகழ்ச்சியின் போதுதிறந்து வைக்கப்படுகிறது. அப்துல் கலாம் இதை திறந்து வைக்கிறார். மேலும்,மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடல் நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார்.
இதே நிகழ்ச்சியின் போது, திராவிட இயக்க ஆய்வு மையத்தை முதல்வர் கருணாநிதிதொடங்கி வைக்கிறார்.
பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவையொட்டி முன்னாள் மாணவரும், திரைப்படபாடலாசிரியருமான வைரமுத்து சிறப்புப் பாடல் ஒன்றை எழுதியுள்ளார். இதுநிகழ்ச்சியில் பாடப்படும். ஓராண்டுக்கு இந்த விழா கொண்டாட்டங்கள் நீடிக்கும்.
மேலும் 150வது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில், பெருங்குடி, கேளம்பாக்கம்,முட்டுக்காடு ஆகிய இடங்களில் ஏதாவது ஒன்றில் 150 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்துகொடுத்தால் அதை ஒதுக்குவது குறித்து பரிசீலிப்பதாக தமிழக அரசுஉறுதியளித்துள்ளது. அங்கு புதிய வளாகம் ஒன்றுஅமைக்கப்படும் என்றார்தியாகராஜன்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications