கொழும்பில் பயங்கர குண்டுவெடிப்பு-7 பேர் பலிதப்பிய பாக் தூதர்-கிரிக்கெட் போட்டி ரத்து
கொழும்பு:
கொழும்பில் பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் சென்ற வாகன அணி வகுப்பு மீதுவிடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தினர். இதில் 7 பேர் சம்பவஇடத்திலேயே கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் தூதர் மயிரிழையில் உயிர் தப்பினார்.மேலும் 17 பேர் படுகாயமடைந்தனர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியுள்ள ஹோட்டலுக்கு 3 கி.மீ. தூரத்தில் இந்ததாக்குதல் நடந்தது.இச் சம்பவத்தைத் தொடர்ந்து இன்று கொழும்பில் நடைபெறுவதாக இருந்தஇலங்கை-தென்னாப்பிரிக்க அணிகளிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ரத்துசெய்யப்பட்டது.
இலங்கையில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வரும் நிலையில் இந்தியா,இலங்கை, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒரு நாள்கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று தொடங்க இருந்தது.
இந் நிலையில் இன்று காலை கொழும்பு நகரின் மையப் பகுதியில் அதிபர்ராஜபக்ஷேவின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடத்திலிருந்து அரை கி.மீ.தூரத்தில் சென்று கொண்டிருந்த பாகிஸ்தான் தூதரின் கார் அணிவகுப்பு மீது இந்தத்தாக்குதல் நடந்தது.
கார் அணிவகுப்பு சென்றபோது சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ வெடித்துச்சிதறியது. இதில் தூதரின் கார் தப்பிவிட்டது. ஆனால், பின்னால் வந்த பாதுகாப்புப்படையினரின் கார் வெடித்துச் சிதறியது. இதில் 4 ராணுவ போலீசாரும், 3 பொதுமக்களும் பலியாயினர்.
இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் தங்கியுள்ள தாஜ் சத்ரா ஹோட்டலில் இருந்து 3 கி.மீ.தொலைவில் இச் சம்பவம் நடந்தது.
இலங்கைக்கு பாகிஸ்தான் ராணுவ உதவிகள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.மேலும் இன்று பாகிஸ்தானின் சுதந்திர தினம் என்பதும் குறிப்பிடத்தக்கது.இலங்கைக்கு பாகிஸ்தான் ராணுவ உதவி செய்வதை கண்டிக்க அவர்களது சுதந்திரதினத்தன்று இந்தத் தாக்குதலை புலிகள் நடத்தியதாகத் தெரிகிறது.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தால் கொழும்பு நகரில் பெரும் பதற்றம் நிலவுகிறது.சம்பவம் நடந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சீல் வைத்துள்ளனர்.
இச் சம்பவத்தையடுத்து இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இன்று நடைபெறுவதாக இருந்தஇலங்கை-தென்னாப்பிரிக்கா இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி ரத்துசெய்யப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளின் வீரர்கள் பாதுகாப்பான இடத்திற்குகொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
குண்டுவெடிப்புச் சம்பவத்தைத் தொடரந்து இலங்கை அதிகாரிகளுடன் இந்தியகிரிக்கெட் அணி நிர்வாகம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவசர ஆலோசனைநடத்தியது. வீரர்கள் பத்திரமாக இருப்பதாகவும், இலங்கை பயணத்தை ரத்து செய்யும்எண்ணம் இல்லை என்றும் இந்திய அணியின் மேலாளர் ராஜன் நய்யார்தெரிவித்துள்ளார்.
குண்டுவெடிப்புக்கு விடுதலைப் புலிகள் அமைப்புதான் காரணம் என்றும் பாகிஸ்தான்தூதரை புலிகள் குறி வைத்ததாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் ரம்புகெவல்லா தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications