Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் பயங்கரதீவிபத்து; சதி வேலை காரணமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 10க்கும் மேற்பட்டதீயணைப்பு வாகனங்கள் நீண்டநேரம் போராடி தீயை அணைத்தன. இதன் காரணமாக ரயில் போக்குவரத்துமுற்றிலும் பாதிக்கப்பட்டது.

சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தின் நுழைவாயில் பகுதியில் ஏராளமான பிளாஸ்டிக் பைப்புகள் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. இந்த இடத்தில் இன்று காலை 8 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் என்பதால்வெகு வேகமாக தீ பரவி கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

கட்டிடத்தின் வெளிப்புறம் பிடித்த இந்த தீ உள்புறத்திலும் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால்அப்பகுதியே புகை மண்டலமாக காட்சி அளித்தது. ரயில் நிலையத்திற்கு வந்திருந்த ஆயிரக்கணக்கான பயணிகள்அங்கும் இங்கும் சிதறி ஓடினர். தீவிரவாதத் தாக்கதல் என நினைத்த பல பயணிகள் அதிர்ச்சி அடைந்து ஓட்டம்பிடித்தனர். ரயில்வே பணியாளர்களும் அங்கிருந்து வெளியேறினர்.

உடனடியாக தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. வேப்பேரி, திருவல்லிக் கேணிஉள்ளிட்ட பகுதிகளிலிருந்து 10க்கும் மேற்பட்ட தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. ஆனால் பயங்கரபுகையுடன் தீ கொளுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததால் தீயணைப்பு வீரர்களால் உள்ளே நுழையமுடியவில்லை. மிகுந்த சிரமப்பட்டு தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் ஈடுபட்டனர்.

சுமார் 2மணி நேரப் பாராட்டத்திற்குப் பின்னர் தீ அணைக்கப்பட்டது. தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள்பயன் படுத்திய தண்ணீர் ரயில் நிலையம் முழுவதிலும் ஆறு போல ஓடியதால் அப்பகுதியே வெள்ளக்காடாககாணப்பட்டது.

இந்த தீவிபத்தில் ஹிக்கின் பாதம்ஸ் புத்தக நிலையம் முழுவதுமாக எரிந்து சாம்பலானது. அருகில் இருந்தஇன்டர்நெட் மையத்திலும் தீ பரவியது. இதையடுதது மையத்திற்குள் தண்ணீரை பீய்ச்சி அடித்தபோது, அங்கிருந்தகம்ப்யூட்டர்கள் உள்ளிட்டவை பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறின. இன்டர்நெட் மையம் மொத்தமாகசேதமடைந்தது.

மொத்தம் 40 கம்ப்யூட்டர்கள் தீயில் கருகி விட்டன. பல லட்சம் ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டிருப்பதாககருதப்படுகிறது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர்ச் சேதம் ஏதும் இல்லை. ஒரு தீயணைப்பு வீரர் மட்டும்புகையில் சிக்கி மயக்கமடைந்தார்.

இந்த தீவிபத்து காரணமாக சுமார் 2 மணி நேரம் ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவம் குறித்து அறிந்ததும் ரயில்வே உயர் அதிகாரிகள் விரைந்து வந்தனர். டிஜிபி முகர்ஜியும் விரைந்து வந்துவிசாரணை மேற்கொண்டார். தீவிபத்துக்கு சதி வேலை காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பிவிசி பைப்புகளை இங்கே போட்டு வைத்தது ஏன் என்றும் விசாரணை நடந்து வருகிறது.ரயில் நிலையத்தின் உட்புறம் இந்தியன் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. நல்ல வேளையாக இதில் தீபிடிக்கவில்லை. அந்த இயந்திரத்தில் பல லட்சம் ரூபாய் கட்டுக்கள் இருந்தது. ஆனால் இந்த மையம்தப்பிவிட்டது.

உயர் மட்ட விசாரணைக்கு உத்தரவு:


இந்த தீவிபத்து தொடர்பாக விரிவான உயர் மட்ட விசாரணைக்கு தென்னக ரயில்வே உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் தாமஸ் வர்கீஸ் கூறுகையில், பி.வி.சி பைப்புகளில் எப்படிதீப்பிடித்தது என்பது குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

சேத மதிப்பு முழுமையாக தெரியவில்லை. மதிப்பிடப்பட்டு வருகிறது. சதி வேலை காரணமா என்பது குறித்தும்விசாரணைக்குப் பிறகுதான் தெரிய வரும்.

ரயில் போக்குவரத்து 2 மணி நேரம் மட்டுமே பாதிக்கப்பட்டது. தற்போது நிலைமை சீரடைந்துள்ளது என்றார்வர்கீஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+