பல கோடிமோசடி: மேலும் ஒரு பிஷப் மீது புகார்!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

வீடு கட்டித் தரும் ஆர்டர் கொடுப்பதாக கூறி ஏகப்பட்ட காண்டிராக்டர்களிடம் பல கோடி பணத்தை மோசடிசெய்து விட்டதாகஇன்னொரு பிஷப் மீது புகார் எழுந்துள்ளது.

இலவச வீடு கட்டும் திட்டம் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம் கிட்டத்தட்ட ரூ. 100 கோடி அளவுக்குமோசடிசெய்த பிஷப் ஆனந்தராஜ் என்ற மோசடிப் பாதிரியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது மனைவியும் கோர்ட்டில்சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தினசரி ஆனந்தராஜ் குறித்த பல பரபரப்புத் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் இன்னொரு பிஷப்பும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவரது பெயர் யோபு சரவணன். வேலூர் மாவட்டம் காட்பாடி,காந்தி நகரில், வேலூர் கல்வாரி அறக்கட்டளை மற்றும் சர்வதேச கல்வாரி அறக்கட்டளை என்ற பெயரில் ஒரு அமைப்பைவைத்துள்ளார் யோபு சரவணன். இதன் கிளை அலுவலகம் கிழக்கு முகப்பேரில் உள்ளது.

வெளிநாட்டு உதவியுடன் 5 லட்சம் வீடுகள் தமிழகம் முழுவதும் கட்டித் தரப்படவுள்ளதாகவும், இதை நிறைவேற்ற தகுதியானகாண்டிராக்டர்கள் தேவை என்றும் யோபு சரவணனின் நிறுவனம் விளம்பரம் செய்தது. இதை நம்பிய ஏராளமானகாண்டிராக்டர்கள் யோபு சரவணனை சந்தித்து பணத்தைக் கொட்டினர். ஒவ்வொரு காண்டிராக்டரும் தலா ரூ.2 லட்சம் வரைகொடுத்திருப்பதாக தெரிகிறது.

முதலில் மாதிரி வீடு கட்டித் தரவேண்டும். அதன் பிறகே முழுகாண்டிராக்ட் வழங்கப்படும் என யோபுசரவணன்காண்டிராக்டர்களிடம் தெரிவித்திருந்தார். இதன்படி பலகாண்டிராக்டர்கள் மாதிரி வீடுகளை கட்டி முடித்தனர். ஆனால்உறுதியளித்தபடி அவர்களுக்கு காண்டிராக்ட் கிடைக்கவில்லை. உறுதியளித்திருந்த பணம் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில்தான் ஜகஜாலகில்லாடி ஆனந்தராஜ் குறித்த செய்திகள் வெளியாகத் தொடங்கின. இதைப் பார்த்தகாண்டிராக்டர்கள் யோபு சரவணன் மீது சந்தேகமடைந்தனர். நேற்று ஏராளமான காண்டிராக்டர்கள், கப்பேரில் உள்ள யோபுவின்அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தகவல் தெரிந்து போலீஸாரும் அங்கு விரைந்து வந்தனர்.

போலீஸார் வருவதைப் பார்த்ததும் அறக்கட்டளை நர்வாகிகள், காண்டிராக்டர்களை தனியாக அழைத்து, உங்களுக்குக்கொடுப்பதற்காக ரூ.100 கோடி பணம் வெளிநாட்டிலிருந்து வந்துள்ளது. ஆனால் மத்திய அரசு அதை அனுமதிக்க தாமதம்செய்து வருகிறது. அதை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படடுள்ளது.

இந்த நிலையில், வழக்கு என்று வந்தால், பணம் கிடைப்பது சிக்கலாகி விடும். வியாழக்கிழமை உங்களுக்குரிய பணம்வழங்கப்பட்டு விடும். பொறுமையாக இருங்கள் என்று கூறினர். இதை ஏற்ற காண்டிராக்டர்கள், போலீஸாரிடம் புகார் ஏதும்தரமறுத்து விட்டனர்.

வியாழக்கிழமை பணம் கிடைக்காவிட்டால் அன்று புகார் கொடுக்கிறோம் என்றுபோலீஸாரிடம் தெரிவித்ததால் அவர்கள்திரும்பிச் சென்றுவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+