நிரம்புகிறது மேட்டூர்: 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாயம்
மேட்டூர்:
மேட்டூர் அணை மிக வேகமாக நிரம்பி வருகிறது. இன்றைக்குள் அணை நிரம்பிவிடும்என்பதால் 11 மாவட்டங்களில் காவிரிக் கரையோர மக்களுக்கு வெள்ள அபாயஎச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் கன மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவிலானதண்ணீர் வந்து கொண்டுள்ளது. அதிக அளவிலான நீர் வரத்து காரணமாக கடந்த 4நாட்களில் 8 அடி அளவுக்கு அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.அணைக்கு தற்போது வினாடிக்கு 75,000 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.அணையின் நீர் மட்டம் நேற்று மாலை 117 அடியாக இருந்தது. இன்று காலை 118அடியாக உயர்ந்தது.
அணையின் மொத்த கொள்ளளவு 120 அடி தான். எனவே இன்று இரவுக்குள் அணைநிரம்பி விடும் என எதிர்பார்க்கப்படுகிறுத. அணை நிரம்பினால் உபரி நீர் திறந்துவிடப்படும். வினாடிக்கு குறைந்தது 50,000 கன அடி நீர் திறந்து விடப்பட வாய்ப்புஉள்ளதால் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காவிரிக் கரையோரம் உள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன்இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அணையிலிருந்து தற்போது காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 24,000 கனஅடி நீரும், கால்வாய் பாசணத்திற்காக வினாடிக்கு 600 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு மொத்தம் 4 முறை அணை நிரம்பி சாதனை படைத்தது. இந்த ஆண்டில்முதல் முறையாக அணை நிரம்பவுள்ளது. தமிழகத்தில் இன்னும் மழைக் காலம் சூடுபிடிக்கவில்லை என்பதால் இந்த ஆண்டும் மேட்டூர் அணை அதிக முறை நிரம்பி புதியசாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications