மேட்டூர் அணை நிரம்பியது; 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!
சேலம்:
மேட்டூர் அணை இன்று பிற்பகல் தனது முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதையடுத்து உபரி நீர்திறந்து விடப்பட்டுள்ளதால், காவிரிக் கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிககைவிடப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் தொடர்ந்து மழை பெய்ததா அங்குள்ள கிருஷணராஜசாகர், கபிணி உள்ளிட்ட முக்கிய அணைகள்நிரம்பின. இதையடுத்து அங்கிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டது.இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வரத் தொடங்கியதால் அணை வேகமாக நிரம்பத் தொடங்கியது. இன்றுபிற்பகலில் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை எட்டியது. இந்த ஆண்டில் மேட்டூர் அணைநிரம்புவது இதுவே முதல் முறையாகும்.அணை நிரம்பியதைத் தொடர்ந்து உபரி நீர் திறந்து விடப்படட்ள்ளது.
இதனால் காவிரி கரையோரம் உள்ள 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞசாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, பெரம்பலூர் ஆகியஉள்ளிட்ட காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களில் காவிரிக் கரையோரம் உள்ள மக்கள் பாதுகாப்பானஇடங்களுக்கு செல்லுமாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது அணையிலிருந்து கூடுதலாக விநாடிக்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுஇன்று இரவுக்குள் விநாடிக்கு 60,000 கன அடியாக படிப்படியாக உயர்த்தபடும் என தெரிவிக்கப்பட்டுளளது.இதனால் காவிரியில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் உடனடியாகபாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து கர்நாடக அணைகளிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால், மேட்டூர்அணைக்கு அதிக அளவிலான உபரி நீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் கிட்டத்தட்ட 81 நாட்களுக்கு உபரி நீர் மேட்டூர் அணைக்கு வந்தது.மொத்தம்1.42 லட்சம் கன அடிநீர் வந்தது என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications