சட்டசபையில் சிங்கி அடித்த அதிமுக எம்.எல்.ஏ. வெளியேற்றம்
சென்னை:
சட்டசபையில் சிங்கி அடித்த அதிமுக எம்.எல்.ஏ. அவைக் காவலர்களால்வெளியேற்றப்பட்டார். இதைக்கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச்செய்தனர்.
சட்டசபையில் இன்று நெடுஞ்சாலைத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம்நடந்தது. இதில் அதிமுக துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், அதிமுகஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட பல திட்டங்கள் குறித்துப் பேசினார்.அப்போது குறுக்கிட்ட மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி, கடந்த ஆட்சியில்ஒரே மாதத்தில் ஒரு ரோட்டை இரண்டு முறை போட்டுள்ளனர். முதலில் ரோடுபோட்டதாகவும், பின்னர் புதுப்பித்துப் போட்டதாகவும் கணக்கு காட்டியுள்ளனர்.
இதன்படி ரூ.1.14 கோடி அளவுக்கு நிதி முறைகேடு நடந்திருப்பதாக தெரிகிறது.இதற்கு யார் பொறுப்பாளர்களாக இருந்தாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கைஎடுக்கப்படும் என்றார்.
அப்போது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர்அல்போன்ஸ், கடந்த ஆட்சிக் காலத்தில்சாலைகள் போட்டதில் நடந்த அவலங்களில் ஒரு உதாரணத்தைத் தான் அமைச்சர்சுட்டிக் காட்டியுள்ளார் என்றார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புதெரிவித்து குரல் கொடுத்தனர்.
சபாநாயகர் எச்சரித்தும் அவர்கள் அமரவில்லை. இந்த நிலையில், அதிமுகஎம்.எல்.ஏ. ரவிசந்திரன் தான் கொண்டு வந்திருந்த சிங்கியை எடுத்து பலமாகஅடித்தார்.
இதைக் கவனித்த சபாநாயகர் ஆவுடையப்பன், அவையின் கண்ணியத்தைக்குலைக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள அதிமுக உறுப்பினர் ரவிசந்திரனைவெளியேற்ற அவைக்காவலர்களுக்கு உத்தரவிடுகிறேன் எனறார்.
இதையடுத்து அவரை அவைக்காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே கொண்டுபோய்விட்டனர். அப்போது அவைக்காவலர் ஒருவரின் தொப்பி தட்டி விடப்பட்டுபறந்தது. இதைப் பார்த்த சபாநாயகர், அதிமுக உறுப்பினர்கள் அமைதி காக்கவேண்டும். இல்லாவிட்டால் அனைவரையும் வெளியேற்ற நேரிடும் எனறுஎச்சரித்தார்.
ஆனால், சபாநாயகரை கண்டித்து பின்னர் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்புச்செய்தனர். பின்னர் அவை முன்னவரான நிதியமைச்சர் அன்பழகன் எழுந்துஅவையின் உரிமையைமீறும் வகையில் ரவிசந்திரன் செயல்பட்டுள்ளார்.
எனவே இதை உரிமைக் குழுவுக்கு அனுப்பி அவர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். இதையடுத்து இந்தப் பிரச்சினையை உரிமைக் குழுவுக்குஅனுப்புவதாக சபாநாயகர் அறிவித்தார். வெளியேற்றப்பட்ட ரவிச்சந்திரன்சட்டசபைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில்,
என்னை 20 காவலர்கள் குண்டுக்கட்டாக தூக்கி வந்து வெளியே போட்டனர்.பிணத்தைத் தூக்கி வருவது போல என்னை தூக்கி வந்தார்கள். தூக்கிவரும்போதுஅவர்களில் பலர் என்னைக் கிள்ளியும், அழுத்திப் பிடித்தும்கொடுமைப்படுத்தினார்கள். அங்கும் இங்கும் அலைக்கழித்து தூக்கி வந்ததால் எனதுசட்டை, வேட்டி கிழிந்து விட்டது என்றார்.
இதற்கிடையே, சில நாட்களுக்கு முன்பு சபையிலிருந்து வெளியேற்றப்பட்டு இந்தக்கூட்டத் தொடர் முழுவதும் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருந்த அதிமுகஉறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி நாளைமுதல் கலந்து கொள்ளலாம் என சபாநாயகர்அறிவித்துள்ளார்.
ஆபாசமாக பேசியதற்காக அக்ரி கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட்செய்யப்பட்டிருந்தார். இந்த நடவடிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முதல்வர் கருணாநிதியும், அமைச்சர் ஆற்காடு வீராசாமியும் கேட்டுக்கொண்டதைத் தொடர்ந்த அக்ரி மீதான தடையை நீக்கி சபாநாயகர் உத்தரவிட்டார்.
நாளை முதல்அக்ரி கிருஷ்ணமூர்த்தி சபைக்கு வரலாம் என சபாநாயகர்அறிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications