அமெரிக்கா: சட்ட விரோத குடியேறியவர்களில் 3% இந்தியர்கள்
வாஷிங்டன் :
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களில் 3 சதவீதம் பேர் இந்தியர்கள்என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட விரோத குடியேற்றத்தைத் தடுக்க அமெரிக்கா பல்வேறு நடவடிக்கைகளைஎடுத்து வருகிறது.தென் அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள்தான் அதிக அளவில் அனுமதி இல்லாமல்குடியேறி வருகின்றனர். மொத்தம் 1.1கோடி பேர் சட்டவிரோதமாக அமெரிக்காவில்குடியேறியுள்ளதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
இவர்களில் மெக்ஸிகோ, எல் சால்வடார், கெளதமாலா ஆகிய நாடுகளைச்சேர்ந்தவர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளனர்.
நான்காவது இடத்தில் இந்தியா உள்ளது. மொத்தம் உள்ள சட்டவிரோத குடியேறிகளில்3 சதவீதம் பேர் இந்தியர்களாம்.
கடந்த 2000ம்ஆண்டு 1,20,000 இந்தியர்கள் சட்டவிரோதமாக அமெரிக்காவில்குடியேறினர். இது 2005ம்ஆண்டு 2,80,000 ஆக உயர்ந்தது.
2005ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சட்டவிரோதமாகக் குடியேறிய மெக்ஸிகோநாட்டவர்கள் எண்ணிக்கை 60 லட்சமாக உயர்ந்துள்ளது.
2வது இடத்தை எல்சால்வடார் நாடும் (4,70,000) , 3வது இடத்தை கெளதமாலாவும்(3,70,000), 4வது இடத்தை இந்தியாவும் (2,80,000) பிடித்துள்ளன.
சட்ட விரோதமாக குடியேறுபவர்கள் கலிபோர்னியா மாநிலத்தில்தான் அதிக அளவில்உள்ளனர். இங்கு மட்டும் 20.8 லட்சம் பேர் உள்ளனர். அதற்கு அடுத்துடெக்ஸாஸில்10.4 லட்சம் பேர் உள்ளனர்.
கலிபோர்னியா, டெக்ஸாஸ், புளோரிடா, நியூயார்க், இல்லினாய்ஸ் ஆகிய ஐந்துமுக்கிய மாநிலங்களில்மொத்தம் 60.1 லட்சம் சடடவிரோத குடியேறிகள் வசிப்பதாககணக்கிடப்பட்டுள்து.
2005ம்ஆண்டு கணக்குப்படி சடட விரோதமாக குடியேறிய முதல்10வெளிநாட்டவர்ளின் எண்ணிக்கை:
மெக்ஸிகோ (50.9 லட்சம்), எல்சால்வடார் (4,70,000), கெளதமாலா (3,70,000),இந்தியா (2,80,000), சீனா(2,30,000), கொரியா( 2,10,000),பிலிப்பைன்ஸ்(2,10,000), ஹோண்டுராஸ்(1,80,000), பிரேசில்(2,30,000),வியட்நாம் (1,60,00).
இந்தத் தகவல்களைஅமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்றத்துறைவெளியிட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications