அதிமுக ஆட்சியில் தொழிற்துறை புரட்சி-ஜெயகுமார்
சென்னை:
அதிமுக ஆட்சியில் தான் தொழில்துறையிலும், தகவல் தொழில்நுட்ப துறையிலும் மிகப் பெரிய புரட்சி ஏற்பட்டதுஎன அதிமுக எம்எல்ஏ ஜெயக்குமார் கூறினார்.
சட்டசபையில் தொழிற்துறை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது,அதிமுக ஆட்சியில் தொழில்துறையிலும், தகவல் தொழில்நுட்ப துறையிலும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது.மத்திய அரசு வெளியிட்ட இடைக்கால புள்ளியியல் அறிக்கையில் தொழில் துறையில் 2005ம் ஆண்டு தமிழ்நாடுமுதலிடத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சுமார் 98.66 லட்சம் பேருக்கு தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது. வேலை வாய்ப்பில் தமிழகம் 2வதுஇடத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதிமுக ஆட்சிக்காலத்தில் ரூ. 18,000 கோடி மதிப்பில்சென்னை நகரில் சாலைகள், மேம்பாலங்கள், பூங்காக்கள் அமைக்கவும், குடிநீர் வசதி பெருக்கவும் திட்டம் தீட்டிசெயல்படுத்தப்பட்டது.
அம்மாவின் தொழில் கொள்கையால் தான் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் இந்திய தரக் கட்டுப்பாட்டுசெயலகத்தின் ஐஎஸ்ஓ 901-2002 என்ற சான்றிதழை பெற்றது. மின் உற்பத்திக்கான திட்டங்களையும் அதிமுகஆட்சி செயல்படுத்தியது.
ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைந்த விலையில் கார் தொழிற்சாலை ஒன்றை ரத்தன் டாடா நிறுவத்தினர் தமிழ்நாட்டில்அமைப்பதற்கு அம்மாவை சந்தித்து பேச திட்டமிட்டு இருந்தனர். அப்போது தேர்தல் சுற்றுப்பயணத்தில்இருந்ததால் பேச இயலவில்லை.
ஆனால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் அந்த தொழிற்சாலை மேற்கு வங்காளத்துக்கு போய் விட்டது. அம்மாஆட்சியில் தொழில் தொடங்குவது ஒரு குழந்தை பெற்ற தாயிடம் வளர்வது போல, திமுக ஆட்சியில்தொடங்குவது குழந்தை மாற்றாந்தாயிடம் வளர்வது போல என்றார் ஜெயக்குமார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் கருணாநிதி வளர்ப்பு மகன் போல என்று கூறியதை திமுகவினர் மேஜைத்ைதட்டி வரவேற்றனர்.
தொடர்ந்து பேசிய ஜெயக்குமார், பெற்ற தாய்க்கும் மாற்றாந்தாயிக்கும் உள்ள வித்தியாசம் தொழில்அதிபர்களுக்கும் தெரியும், தமிழக மக்களுக்கும் புரியும்.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: இந்த ஆட்சி வந்த பிறகு பல வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடுசெய்ய முன் வந்திருப்பது தான் உண்மை. அதிமுக ஆட்சியின் போது பல நிறுவனங்கள் தொழில் தொடங்கதயாராக இருந்தும் அதற்கு வாய்ப்புகள் வழங்கப்படாததால் அவர்கள் கர்நாடகா, ஆந்திரா என்றுபோய்விட்டார்கள் அதுதான் உண்மை.
திமுக ஆட்சி வந்தபிறகு நோக்கியா, மோட்டரோலா போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில்தொடங்க முன்வந்தன. வெளிநாட்டில் இருக்கும் தொழில் அதிபர்கள் ரூ. 1,000 கோடி செலவில்தொழிற்சாலைகள் தொடங்க முன் வந்திருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்நிய முதலீடுகளும் புதியதொழிற்சாலைகளும் அதிக அளவில் தமிழ்நாட்டை தேடி வருகிறது என்பது தான் உண்மை எனறார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications