ராமதாஸ் தாக்குதல்: காங்கிரஸ் கொந்தளிப்பு
சென்னை:
வீரப்ப மொய்லி மற்றும் ப.சிதம்பரத்தை கடுமையாக விமர்சித்து பாமக நிறுவனர்ராமதாஸ் பேசியிருப்பதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கடலூரில் நடந்த மாவட்ட பாமக பொதுக்குழுக் கூட்டததில் பேசிய ராமதாஸ்,பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் விவகாரத்தில் வீரப்பமொய்லியும், ப.சிதம்பரமும் துரோகம் இழைத்து விட்டார்கள். மொய்லி தமிழகத்திற்குவரும் போது கருப்பு கொடி காட்டி விரட்டுவோம் என கோபமாக கூறினார்.மேலும், சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியினர் பாமகவுக்கு துரோகம் இழைத்துவிட்டதாகவும் மறைமுகமாக தாக்கியுள்ளார். ராமதாஸின் பேச்சுக்கு காங்கிரஸ்வட்டாரத்தில்கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
கட்சியின் சிலமூத்த தலைவர்கள் ராமதாஸ் பேச்சு குறித்து இன்று கூடி ரகசியஆலோசனை நடத்தினர். கூட்டதிதற்குப் பின்னர் இவர்கள் ராமதாஸ் பேச்சு குறித்துபகிரங்கமாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டனர். இருப்பினும் ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் பகிரங்கமாக ராமதாஸைவிமர்சித்துள்ளனர்.
முன்னாள் எம்.பியும், ப.சிதம்பரத்தின் தீவிர ஆதரவாளருமான வள்ளல் பெருமான்கூறுகையில், யார் தடுத்தாலும் 27 சதவீத இடஒதுக்கீடு வந்தே ஆகும் என்றுசென்னையில் நடந்த கூட்டத்தில் ராமதாஸையும், கி.வீரமணியையும் அருகில்வைத்துக் கொண்டு முழங்கியவர் தான் ப.சிதம்பரம்.
உண்மை இப்படி இருக்க ப.சிதம்பரம் மீது ராமதாஸ் பாய்ந்திருப்பது ஆச்சரியமாகஉள்ளது. வீரப்ப மொய்லி தலைமையில் ஆய்வுக் கமிட்டி அமைக்க முக்கியக்காரணமாக இருந்தவரே ப.சிதம்பரம் தான். இடஒதுக்கீடு கொடுக்க தற்சமயம் உள்ளசீட்டுகளை கூட்டினால் எவ்வளவு செலவீனம் ஏற்படும், அதற்கான நிதியாதாரத்தைஎப்படி பெருக்குவது என்று அரசுக்கும் அறிவுரை வழங்கியவர் சிதம்பரம் தான்.
அமைச்சரவைக் கூட்டத்திலும், நாடாளுமன்றத்திலும், பொதுக் கூட்டங்களிலும் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகத்தான் ப.சிதம்பரம் பேசியுள்ளாரே தவிர எங்குமே எதிர்ப்புதெரிவித்ததில்லை.
இந்த பிரச்சினைமுக்கியமானது, உணர்ச்சிகரமானது. இதுகுறித்து தினம் தினம்அறிக்கை விட்டு மக்களை உசுப்பேற்றி விடுவது சரியாக இருக்காது. அதிலும்ப.சிதம்பரம் மாதிரி பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள், மற்ற அரசியல்கட்சிகளின் தலைவர்கள் போல மக்களை உசுப்பேற்றும் வகையில் பேசவோ,நடக்கவோ, அறிக்கை விடவோ முடியாது என்றார் வள்ளல் பெருமான்.
இதேபோல சிதம்பரம் ஆதரவாளர்களான காரைக்குடி எம்.எல்.ஏ.சுந்தரம், திருமயம்எம்.எல்.ஏ. ராமசுப்புராம் ஆகியோரும் ராமதாஸுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.இருவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், 27 சதவீத இடஒதுக்கீடு தேவை என்றுமுதலில் குரல் கொடுத்தவர் ப.சிதம்பரம் தான்.
நிலைமை இப்படியிருக்க பாமக நிறுவனர் ராமதாஸுக்கு இந்த விவரங்கள் கூடவாதெரியாது என்று காட்டமாக கேட்டுள்ளனர்.
ராமதாஸின் காட்டமான பேச்சு குறித்து சோனியா காந்தியிடம் புகார் தெரிவிக்கவும்தமிழக காங்கிரஸ் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.
டாக்டர்கள், மாணவர்கள் ஸ்டிரைக்:
இதற்கிடையே உயர் கல்வி நிறுவனங்களில் பிற்பட்டவகுப்பினருக்கு 27 சதவீதஇடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்குஎதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் உள்ள ஐந்து மத்திய அரசின் மருத்துவமனைகள்மற்றும் மருத்துவக் கல்லூரிகளின் மாணவர்கள், டாக்டர்கள் 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
இன்று டாக்டர்கள் ஒட்டுமொத்த விடுப்பு எடுத்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.இதன் காரணமாக இந்த மருத்துவமனைகளில் நோயாளிகள் கடும் பாதிப்புக்குஆளாகியுள்ளனர். அவசர சிகிச்சைப் பிரிவுகள் மட்டுமே இயங்கி வருகின்றன.
இதுகுறித்து அகில இந்திய மருத்துவ விஞ்ஞான கழக உள்ளிருப்பு டாக்டர்கள் சங்கத்தலைவரும், சமத்துவத்திற்கான இளைஞர் அமைப்பின் தலைவருமான பினோத்பாத்ரா கூறுகையில், அடுத்த முறை காங்கிரஸ் கட்சிக்கு டாக்டர்களும், மருத்துவக்கல்லூரி மாணவர்களும் வாக்களிக்க மாட்டார்கள்.
நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்காக வருந்துகிறோம். ஆனால் எங்களதுகோரிக்கையை அரசு கேட்க மறுத்து விட்டதால் வேறு வழியின்றி இப்போராட்டத்தில்குதித்துள்ளோம்.
எந்த அடிப்படையில் இடஒதுக்கீடு அமல்படுத்தப்படுகிறது என்பதை அரசு விளக்கவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டால் யாருக்கு பாதிப்பு ஏற்படப் போகிறது.பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களா? அல்லது கிரீமிலேயரைச் சேர்ந்தவர்களா?என்றார் பாத்ரா.












Click it and Unblock the Notifications