பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு: நாடாளுமன்றத்தில் மசோதா தாக்கல்- கிரீமி லேயர் பிரிவு இல்லை

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினருக்கு 27 சதவீதஇடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டது.

மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மிகவும்பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசுமுடிவுசெய்தது. இதற்கு ஒருதரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இருப்பினும் இந்த சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு உறுதியாக இருந்தது. இதுதொடர்பான சட்ட மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய மத்தியஅமைச்சரவை சமீபத்தில் ஒப்புதல் கொடுத்தது.

இதன மூலம் ஐஐஎம், ஐஐடி, மத்திய மருத்துவக் கல்லூரிகள் உள்ளிட்ட உயர் கல்விக் கூடங்களில்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு கிடைக்கவுள்ளது. ஆனால், இந்த இட ஒதுக்கீட்டை வரும் 3ஆண்டுகளில் படிப்படியாக அமலாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதை திமுகவும், பாமகவும்கடுமையாக கண்டித்துள்ளன.

டெல்லியில் உள்ள பல்வேறு மருத்துவக் கல்லூரி மாணவர்கள், டாக்டர்கள் இந்தமசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து வேலை நிறுத்தத்தில் குதித்துள்ள நிலையில்திட்டமிட்டபடி இன்று நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை மத்திய மனிதவளத்துறை அமைச்சர் அர்ஜூன்சிங் லோக் சபாவில் தாக்கல் செய்தார்.

மசோதாவில், சமூக மற்றும் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு மத்தியஅரசின் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். 3ஆண்டுகளுக்கு பிரித்து இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மசோதாவில் கிரீமி லேயர் பிரிவு குறித்து குறிப்பிடப்படவில்லை. பிற்படுத்தப்பட்டவர்களில்பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு (கிரீமி லேயர்) இட ஒதுக்கீடு தரக் கூடாது என்ற கோரிக்கையைமத்திய அரசு ஏற்கவில்லை.

மசோதாவில் 8 மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீட்டிலிருந்துவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நாடாளுமன்ற நிலைக் குழுவுக்குஅனுப்பப்படுகிறது.

இடஒதுக்கீட்டை 3 ஆண்டுகளுக்குப் பிரித்துக் கொடுப்பதற்கு திமுக மற்றும் பாமகஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

விலக்கு அளிக்கப்பட்டும் நிறுவனங்கள்:

ஜவஹர்லால் நேரு அறிவியல் ஆய்வு மையம், பெங்களூர்.ஹோமி பாபா தேசிய ஆய்வுக் கழகம் மற்றும் தொடர்பு நிறுவனங்கள்.

தேசிய மூளை ஆய்வு மையம், மனிசார், ஹரியானா. வட கிழக்கு இந்திரா காந்தி சுகாதார ஆய்வுக் கழகம், ஷில்லாங். பிசிக்கல் ஆய்வு மையம்,அதமதாபாத்.

ஸ்பேஸ் அண்ட் பிசிக்ஸ் லேப், திருவனந்தபுரம். இந்திரா காந்தி தொலை உணர்வு ஆய்வு மையம், டேராடூன் ஆகியவை இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் வராதுஎன அர்ஜூன் சிங் இன்று தாக்கல் செய்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மசோதா மீது குளிர்காலக் கூட்டத் தொடரில் விவாதமும் ஓட்டெடுப்பும் நடக்கவுள்ளது. அதைத் தொடர்ந்துவரும் கல்வியாண்டு முதல் இந்த இட ஒதுக்கீடு அமலுக்கு வரவுள்ளது.

இந்த மசோதாவுக்கு பாஜக எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. அக் கட்சியின் எம்பியான யோகி ஆதித்ய நாத்லோக்சபாவில் பேசுகையில், இந்த சட்டத்தால் சமூகம் பிளவுபடப் போகிறது. இது ஒரு நல்ல சட்ட மசோதாவேஅல்ல என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+