வைகோ மீது நடவடிக்கை-சோனியாவிடம் எஸ்ஆர்பி வலியுறுத்தல்
சென்னை:
தமிழ்நாட்டில் இன்னொரு காஷ்மீரை உருவாக்கி விடாதீர்கள் என்று பிரிவினைவாதத்தைத் தூண்டும் வகையில் பேசிய மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீதுகடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம்காங்கிரஸ் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை தி.நகரில் சமீபத்தில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் வைகோ இலங்கைத்தமிழர் பிரச்சினை குறித்து ஆவேசமாக பேசினார். தமிழகத்து இளைஞர்கள் மிகவும்உணர்ச்சிவசப்பிட்டவர்கள். இங்கே இன்னொரு காஷ்மீர் உருவாக வழி வகுத்துவிடாதீர்கள் என்றும் மத்திய அரசை கடுமையாக எச்சரித்தார்.வைகோவின் பேச்சுக்கு தமிழக காங்கிரஸ் எம்.பிக்கள் கடும் எதிர்ப்புதெரிவித்துள்ளனர். வைகோ பேச்சு தொடர்பாக சட்டசைபயிலும் காங்கிரஸ் பிரச்சினைஎழுப்பியது. ஆனால் அதற்கு முல்வர் கருணாநிதி அளித்த பதில் காங்கிரஸ்கட்சியினருக்கு திருப்தி அளிக்கவில்லை.
இதனால் வெளிநிநப்பு செய்வது போல காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் வெளியேறியதால்திமுக தரப்பு அதிர்ச்சி அடைந்தது.
அதன் பின்னர் நாட்டின் இறையாண்மைக்கு விரோதமாக யார் பேசினாலும் அவர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கருணாநிதி சட்டசபையில் எச்சரித்தார்.
இருப்பினும் வைகோ மீது போலீஸ் நடவடிக்கை ஏதும் இதுவரை எடுக்கவில்லை. இதுகாங்கிரஸ் கட்சியினரை அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.
இந் நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் எஸ்.ஆர்.பாலசுப்ரமணியம் டெல்லிசென்றுள்ளார். வைகோ குறித்து சோனியா காந்தி மற்றும் உள்துறை அமைச்சகத்தில்புகார் கொடுக்கவே அவர் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
வைகோ பேசச்சின் வீடியோ ஆதாரம், பத்திரிக்கைளில் வெளியான பேச்சு விவரம்,சட்டசபையில் எழுப்பப்பட்ட பிரச்சினை, முதுல்வர்அளித்த பதில, தென் சென்னைமாவட்ட மதிமுக செயலாளர் மணிமாறன் கைது செய்யப்பட்டுள்ளது உள்ளிட்டஆதாரங்களை சோனியாவிடம் எஸ்.ஆர்.பி. சமர்ப்பிக்கிறார்.
வைகோ மீது உரிய நடவடிக்கை உள்துறை அமைசச்கத்திற்கு அறிவுறுத்துமாறுசோனியாவை எஸ்.ஆர்.பி. வலியுறுத்தவுள்ளார். அதேபோல உள்துறை அமைச்சகசெயலாளர், உள்துறை அதிகாரிகளையும் எஸ்.ஆர்.பி. சந்திக்க திட்டமிட்டுள்ளார்.
மத்திய உள்துறை இணையமைச்சராக எஸ்ஆர்பி இருந்துள்ளார் என்பதுகுறிப்பிடத்தக்கது.
இதேபோல வேறு சில காங்கிரஸ் பிரமுகர்களும் டெல்லி சென்று சோனியாவிடம்இதே கோரிக்கையை வலியுறுத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications