ராமதாஸ் Vs
திருநெல்வேலி:
காங்கிரஸ் தலைவர்களை ராமதாஸ் குற்றம் சாட்டிப் பேசினால், காங்கிரஸ் சும்மா இருக்காது என அந்தக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:உள்ளாட்சித் தேர்தலிலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியே பெரும் வெற்று பெறும்.
பிற்படுத்தப்பட்டவர்களின் இட ஒதுக்கீட்டுக்காக மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரமும் வீரப்ப மொய்லியும்பாடுபட்டு வருகின்றனர். அவர்களை பாமக நிறுவனர் ராமதாஸ் குறை கூறியிருப்பது அவரது சொந்தக்கருத்தாகும் (கிருஷ்ணசாமியும் ராமதாசும் சம்பந்திகள் என்பது குறிப்பிடத்தக்கது)
காங்கிரஸ் தலைவர்களை அவர் குற்றம் சாட்டிப் பேசினால், காங்கிரஸ் சும்மா இருக்காது. பிற்படுத்தப்பட்டமக்களுக்காக காங்கிரசும் குரல் கொடுத்தே வருகிறது.
ஆட்சியில் பங்கு வேண்டும் என்று தேர்தலுக்கு முன்பும் நாங்கள் திமுகவிடம் கேட்கவில்லை, தேர்தலுக்குப்பின்பும் கேட்கவில்லை. அதே நேரத்தில் ஆட்சியில் காங்கிரஸ் பங்கேற்க வேண்டும் என்று தொண்டர்கள்விரும்புகிறார்கள். இது குறித்து கட்சி மேலிடம் தான் முடிவு செய்ய வேண்டும்.
தமிழகத்தில் கூட்டணி தர்மத்துக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்வோம். தமிழகத்தில் காமராஜர் ஆட்சியைஅமைக்க தொண்டர்கள் கடுமையாக உழைத்து வருகிறார்கள்.
சரியாக வேலை செய்யாத மாவட்டத் தலைவர்களை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பே மாற்றிவிட்டு வேறுதலைவர்களை நியமிக்கவுள்ளோம். கோஷ்டிப் பூசலை தடுக்க மேலிடம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறதுஎன்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications