பாப்பாபட்டி, கீரிப்பட்டி பஞ்சாயத்து தேர்தல்-அனைவரும் ஒத்துழைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டாச்சியேந்தல் ஆகிய 4 பஞ்சாயத்துகளிலும் தலித்களைதலைவராக தேர்வு செய்யும் வகையில் சுமூகமாக தேர்தல் நடத்த அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைப்பளிக்கவேண்டும் என முதல்வர் கருணாநிதி கோரினார்.
சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் சுதர்சனம், யசோதா, பாமக உறுப்பினர் ஆறுமுகம், விடுதலை சிறுத்தைஎம்எல்ஏ செல்வ பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் சிவபுண்ணியம் உள்ளிட்ட உறுப்பினர்கள் ஒருசிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வந்தனர்.அவர்கள் பேசுகையில்,
மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், விருதுநகர் மாவட்டம் கொட்டாச்சியேந்தல் ஆகியகிராம பஞ்சாயத்துகளுக்கு சுழற்சி முறையைக் கடைபிடிக்காமல் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்களே தலைமைப்பொறுப்பு ஏற்கும் வகையில் தமிழக அமைச்சரவை முடிவெடுத்ததை பாராட்டுகிறோம். முதல்வருக்கு நன்றியும்தெரிவிக்கிறோம்.
அதே நேரத்தில் இந்த பஞ்சாயத்துகளில் தேர்தல்களை நடத்தி பஞ்சாயத்துத் தலைவர்கள் முழுமையாகபணியாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
(இந்த பஞ்சாயத்துகளில் தலித்களை தலைவர்களாக ஏற்க இன்னொரு ஜாதியினர் அனுமதி மறுப்பதுகுறிப்பிடத்தக்கது)
இதையடுத்து எழுந்த அதிமுக உறுப்பினர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில்,
இந்த பஞ்சாயத்துகளில் 10 ஆண்டுகளாகவே ஆதி திராவிட பிரதிநிதிகள் தலைமை பொறுப்பை ஏற்க முடியாதநிலை உள்ளது. கடந்த திமுக ஆட்சியில் இந்த பஞ்சாயத்துகளுல் யாரும் வேட்பு மனு கூட தாக்கல்செய்யவில்லை. அதிமுக ஆட்சிக்கு வந்ததும் நானும் அப்போதைய ஆதி திராவிட நல அமைச்சரும் அங்கு போய்பேச்சு நடத்தினோம்.
தேர்தல் நடந்தது. தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்றாலும் அவர்கள் உடனடியாக ராஜினாமா செய்யும்சூழ்நிலை ஏற்பட்டது. மீண்டும் அங்கு சுமூக நிலை ஏற்படவும் ஆதி திராவிடர்கள் தொடர்ந்து பதவி வகிக்கவும்நீங்களும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி,
நம் எதிர்க் கட்சித் துணைத் தலைவர் பேசும்போது, நாங்கள் இப்படியெல்லாம் செய்தோம். இன்ன விளைவுகள்ஏற்பட்ட. இப்போது நீங்கள் இதை இதை செய்யுங்கள் என்று குறிப்பிட்டார். இதிலே நீங்களும்-நாங்களும் என்றவார்த்தைகளுக்கே இடமில்லலை. நாம் இதைச் செய்ய வேண்டும். ஏனென்றால் இது எல்லோருக்கும் உரியசமுதாயப் பிரச்சனை.
நாம் உடலால் பலராக இருந்தாலும் சமுதாய ஒற்றுமை, சமூக அநீதியைத் துடைத்தல் என்ற இந்தக் காரியத்தில்ஒரே உருவமாக இருந்து இந்தப் பணியை ஆற்ற வேண்டும்.
அடுத்து அங்கே தேர்தல் நடைபெற்றது, இன்னின்னார் தலைவர்களாக வந்தார்கள், அந்தத் தலைவர்களைஅழைத்து சென்னையிலே நம்முடைய சர்வ கட்சி சார்பிலே ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தினோம் என்றஅளவுக்கு அது நிறைவுற வேண்டும். அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.
அப்போது பேசிய சபாநாயகர் ஆவுடையப்பன், சமூக நீதியின்பால் அக்கறை கொண்ட முதல்வர் கருணாநிதி,தாழ்த்தப்பட்டோருக்கான உரிமைகளை நிலைநாட்டும் வகையில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம்,கொட்டாச்சியேந்தல் ஆகிய 4 ஊராட்சிகளிலும் சுழற்றி முறை பின்பற்றப்படாது. அவை தனி தொகுதிகளாகவேதொடரும் என்று அறிவித்தமைக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications